காலத்தின் வேதவாக்கிய அடையாளங்கள் Birmingham, Alabama, USA 64-0410 1இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை சற்று வணங்குவோம். மகா கிருபையுள்ள பரலோகப் பிதாவே, இன்றிரவு நீர் எங்களுக்கு செவி கொடுப்பீர் என்ற நிச்சயம் உடையவர்களாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே உம்முடைய மகத்தான சிங்காசனத்தையும் மாட்சிமையையும் அணுகுகிறோம். நீர் வேறு எந்த நாமத்திலேயும் எங்களுக்கு செவி கொடுப்பீர் என்ற நிச்சயம் இல்லை. ஏனென்றால், “என்னுடைய நாமத்திலே நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ...” என்று சொன்னீர். ஆகவே இன்றிரவு எங்களை உம்முடைய ராஜ்யத்திற்குள்ளாக ஏற்றுக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம். “அவர் நம்மோடு பேசுகையில் நம்முடைய இருதயம் கொழுந்து விட்டு எரியவில்லையா” என்று எம்மாவூரிலிருந்து வந்த சீஷர்கள் சொன்னது போல நாங்களும் இங்கே இருந்து கடந்து செல்லும் போது சொல்லட்டும். பிதாவே, அந்த அழகான முதல் உயிர்த்தெழுந்த காலை வேளையில் இருந்தவர்களைக் குறித்து சிந்திக்கின்றோம். இயேசு மக்கள் மத்தியில் உயிரோடு காணப்பட்டார். இருப்பினும் அவர்கள் (அவரை நேசித்த சிலர்) அதை இனங்கண்டு கொள்ளவில்லை. அவ்விதமாகவே, இன்றிரவும், ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும், நீர் இன்னும் உயிரோடு எங்கள் மத்தியில் இருக்கிறீர் என்பதை அனேக மக்கள் உணராமல் இருக்கிறார்கள். அவர் உயிர்த்தெழுவார் என்ற வேதவாக்கியத்தை அறிந்த அந்த மக்கள் அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் பிதாவே இந்த மனித குணம் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்களை மன்னியும் ஆண்டவரே. இப்பொழுது, இன்றிரவு உம்முடைய கிருபை எங்களுக்கு போதுமானதாய்இருக்கும்படி ஜெபிக்கிறோம். மேலும் உமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கும் மற்றும் சரீர சுகத்திற்காக உம்மை ஆவலோடு எதிர் பார்க்கிறவர்களுக்கும் உம்முடைய ஆசீர்வாதத்தை அனுகிரகம் பண்ணுவீராக. ஆண்டவரே, இன்றிரவு அவர்கள் தாமே விசுவாசத்திலே உயர்ந்து உம்மை நம்பும்படிக்கு அருளும். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். சங்கை ஜேக் மூர், இந்தக் கட்டிடத்தில் உள்ளாரா? சங்கை ஜேக் மூர்? சகோதரன் ஜேக் மூர். நீங்கள் புத்தகம் வைத்திருக்கும் இடத்திற்கு உடனடியாக அழைக்கப்படுகிறீர்கள். நாம் மீண்டும் ஒரு விசை தேவனுடைய ஆராதனையில் இருப்பதைக் குறித்து சந்தோஷமடைகிறோம். தேவன் எந்த அடிப்படையில் நம்மை சந்திப்பார் என்று வாக்குத்தத்தம் பண்ணினாரோ அந்த அடிப்படையிலேயே நம்மை சந்திப்பார் என்று மிக ஆவலோடு விசுவாசிக்கிறோம். இப்பொழுது, நாம் வல்லமை உடையவர்கள் என்று கோரவில்லை. வியாதியஸ்தரை சுகமாக்கும் வல்லமை நமக்கு உண்டு என்று நான் விசுவாசிப்பதில்லை. நமக்கு வல்லமை இல்லை. ஆனால் அதிகாரம் உண்டு புரிகிறதா? அது வல்லமை அல்ல. உதாரணத்திற்கு சாலையில் நின்று கொண்டிருக்கும் போலீசை கவனியுங்கள், அவன் ஐம்பது கிலோ எடை உடையவன். இங்கே இந்த சாலையில் வரிசையாக வண்டிகள் ஒவ்வொன்றும் முன்னுறு குதிரை திறன் இஞ்ஜின் கொண்டு, ஒரு மணிக்கு நூற்று முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் சாலையில் அதிகமான ஒலியை எழுப்பிக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. முன்னூறு குதிரைத் திறன் கொண்ட வண்டிகள். இவைகளில் ஒன்றைக் கூட நிறுத்தக் கூடிய வல்லமை இந்த சிறிய நபருக்கு இல்லை. ஆனால் அவனுடைய சின்னம்(badge) பிரகாசித்து அவனுடைய கை உயருமானால், பிரேக்குகள் கீச் என்று அடித்து வண்டிகள் ஓரங்கட்டுவதை கவனிப்பீர்கள். அதை நிறுத்தினது அவனுடைய வல்லமை அல்ல, அவன் கொண்டிருக்கும் அதிகாரமே. மேலும் சபையானது இயேசு கிறிஸ்துவினிடத்தில் இருந்து அதிகாரத்தை பெற்றிருக்கிறது, “என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள், அவர்கள் நவமான பாஷைகளைபேசுவார்கள், அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள், அவர்கள் சாவுக்கு ஏதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தம் ஆவார்கள் என்றார்”. அது அவரால் கொடுக்கப்பட்ட அதிகாரமாகும். இப்பொழுது அதே சிறிய போலீஸ் அந்த போக்குவரத்து சாலைக்குச் சென்று தன்னுடைய கையை உயர்த்த பயப்படுவார் என்றால் என்ன ஆகும்? அவன் அவனுடைய போலீஸ் உடையை கழற்றி, பேட்ஜை திருப்பிக் கொடுத்து விடுவது அவனுக்கு நல்லது. ஏனென்றால் அவன் ஒரு போதும் போலீஸ்காரனாக ஆகமாட்டான். நாமும் கூட இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயிற்சி செய்ய பயப்படும் வரைக்கும் ஒரு போதும் ஒரு விசுவாசியாக ஆக முடியாது. நாம் ஜெயத்தைக் கொண்டிருக்கிறோம். நாம் ஜெயத்திற்காக போராட வேண்டியதில்லை. ஏற்கனவே ஜெயத்தை உடையவர்களாய் இருக்கிறோம். அவர் நமக்காக ஜெயத்தைப் பெற்றார். நாம் அல்ல, அவரே நமக்காக ஜெயத்தைப் பெற்றார். அந்த பலமுள்ள ஜெயவீரர் நாம் அல்ல. அவரே அந்த பலமுள்ள ஜெயவீரர். இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு. . . இந்த முதல் சில இரவுகள். . . இந்த விதமான ஒரு பட்டணத்திற்குள் வந்து இப்பொழுதுதான் பழகினோம். அதற்குள்ளாக கை குலுக்கி உடனே கடந்து செல்வதைக் குறித்து வெட்கப்படுகிறேன். மக்களுக்கும் ஊழியத்திற்கும் நியாயமான ஒரு காரியமாக இருக்காது. நிச்சயமாக ஒரு தனிச் சிறப்பான நிலையில் ஊழியம் இருக்கும் போது அதை அறிமுகப்படுத்திடவே இரண்டு இரவுகள் ஆகும். பின்னர் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்படும். அவ்விதமாயிராவிட்டால் மக்கள் எதற்காக வருகிறோம் என்று கூட அறியாதவர்களாய் குருட்டுத்தனமாக அந்த ஜெப வரிசையில் சேருகிறார்கள். இது 'கர்த்தர் உரைக்கிறதாவது“ என்பதை வேதாகமத்தில் இருந்து ஒவ்வொரு வார்த்தையின்படியேயும் தெளிவுப்படுத்தி காட்ட வேண்டும். அது உண்மையே. இந்த மணி வேளையின் செய்தியானது இயேசு கிறிஸ்துவின் மூலமாக விசுவாசமுள்ள ஆபிரகாமின் ராஜரீக வித்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வாக்குத்தத்தத்தின் மூலமாக நாம் ஆபிரகாமுடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறோம். நாம் கிறிஸ்துவினு-டையவர்களாய் இருப்பதினாலே நாமும் ஆபிரகாமின் வித்தாகிய ராஜரீக வித்தாய், பண்ணப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளியாய் இருக்கிறோம். ஈசாக்கின் மூலம் வந்த வித்தாக அல்ல. அது இயற்கையாக பால் உணர்ச்சியினால் உண்டானது. இயேசு பால் உணர்ச்சி இல்லாமல் வந்த வித்து. அவர் தேவனே. நாம் யூத இரத்தத்தினாலோ அல்லது புறஜாதி இரத்தத்தினாலே இரட்சிக்கப்படவில்லை. அவர் யூதரும் அல்ல புறஜாதியும் அல்ல. அவரே தேவன். அவர் தேவனே அன்றி அதில் கொஞ்சம் கூட குறைந்தவர் அல்ல. பார்த்தீர்களா? அவர் கன்னி மரியாளின் கர்ப்பத்திலே கர்ப்பந்தரித்திருந்தார் என்று நாம் அறிவோம். அவள் வெறும் ஒரு அடைகாக்கும் கருவி. அந்த முட்டை அவளுடையது அல்ல. மற்றும் அது எந்த மனிதனுடையதும் அல்லது எந்த ஆணுடைய வித்தும் அல்ல, அதாவது அதுதான் ஒரு ஆணுக்குள்ளாக இருக்கும் ஹீமோகுளோபின், ரத்த அணுக்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஒரு கோழி முட்டை போடலாம். ஆனால் அது ஆண் பறவையோடு சேரவில்லை என்றால், அந்த முட்டை பொறிக்காது. அது முதலாவது ஆண் பறவையோடு சேர வேண்டும். ஆண் ரகம் ரத்த அணுக்கள் உடையதாய் இருக்கிறது. மற்றும் அந்த ஜீவன் அந்த ரத்தத்திற்குள் இருக்கும். இதில் தேவன் தாமே இருந்தார். பெந்தெகோஸ்தினர் அந்த முட்டை மரியாளுடையது என்று விசுவாசிக்கிறார்கள். ஒரு முட்டையானது எந்த உணர்ச்சியும் இல்லாமல் உற்பத்தியாகாது. அப்படி என்றால் தேவன் என்ன செய்திருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்? பாருங்கள்? தேவனே முட்டையையும், ரத்த அணுவையும் செய்தார். அவர் தேவன். அது தேவனுடைய சரீரம். நாம் தேவனை கண்டோம். நம்முடைய கைகளால் தேவனைத் தொட்டோம். 'அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது எவ்வித முரண்பாடுமில்லாமல் மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார். உலகத்திலே இங்கே கையாளப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்“. ஆகவே அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று நாம் இதில் கண்டோம். அவர் நம்மோடு வாசம் செய்தார். நாம் நேற்று இரவு பேசின பிரகாரமாக, அவர் மகத்தான நித்தியமான ஒருவர் என்ற நிலையை மாற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து மனிதனை மீட்கும்படிக்கு மனிதனானார். அவர் தாமே தம்முடைய சொந்த எண்ணங்களின் தன்மையை வெளிப்படுத்தினார். இது மிகவும் அருமையான கதை. ஆனால் தேவன் நம்மை போல் ஒருவராக ஆனார் என்று அறிந்திருந்தும் மக்களால் எப்படி பாவத்தில் தரித்திருக்க முடிகிறது என்று எனக்குப் புரியவில்லை. இங்கே ரூத், நகோமி சம்பவத்திலே இது மிக அழகாக சித்தரிக்கப்-பட்டிருக்கிறது. இதைக் குறித்து நான் பிரசங்கிக்க விரும்புகிறேன், அவரே இனத்தான் மீட்பராக ஆனார். அதை செய்வதற்கு இனத்தான் மீட்பராகத் தான் ஆக வேண்டும். ஒரு சொந்த உறவினராக வந்தாக வேண்டும். ஆவியிலே இனத்தானாக வர முடியாமல் இருந்த தேவன் நமக்கு இனத்தானாக மாறினார்.தேவன் அவருடைய சொந்த சாயலிலே மனிதனை படைத்த போது, அவன் ஆவி. . . மனிதனாக இருந்தான். மற்றும் நிலத்தை பண் படுத்த ஒரு மனிதனும் இல்லை. அதன் பிறகு ஐந்து புலன்களோடு அவனை பூமியில் வைத்தார். அவனுக்குள்ளாக தேவனுடைய ஆவியையுடைய ஒரு விலங்காகஉருவாக்கினார். இப்பொழுது நாம் விலங்குகளுடைய ஜீவியத்தை கொண்டவர்களாக இருக்கிறோம். அதை நாம் அறிவோம். நாம் பாலூட்டி இனத்தை சேர்ந்தவர்கள். பாலூட்டி ரகம், சூடான ரத்தமுடைய விலங்கு, அதன் பிறகு மனிதன் எப்படி தேவனுடைய உருவத்தை எடுத்துக் கொண்டானோ, அவ்விதமாக மனிதனை மீட்கும் பொருட்டு தேவன் மனிதனுடைய தோற்றத்தை எடுத்து வந்தார். ஓ‚எவ்வளவு அருமையான காட்சி இது. எவ்வளவு அருமையான காரியத்தை நாம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது இன்றிரவு ஒரு சிறிய பிரசங்கத்தை செய்யப் போகிறேன். நேற்றைய இரவு அதிக நேரம் உங்களைப் பிடித்து வைத்தேன். ஒன்பது மணிக்கு பிறகு மக்கள் எழுந்து, ஒருவர் இந்த பக்கத்திலும், அங்கேயும் நடந்து வெளியே போகிறதை கவனித்தேன். பாருங்கள், அது தொந்தரவு செய்கிறது. அவ்விதம் செய்வது கூட்டத்தை தொந்தரவு செய்யும். அப்படி செய்யும் போது அது உங்களுடைய தவறு அல்ல என்று எனக்குத் தெரியும். ஒருவேளை நீங்கள் பேருந்தைப் பிடிக்க வேண்டும், அது போன்று ஏதோ ஒன்றை செய்ய வேண்டும், ஆகவே நீங்கள் அங்கே இருக்க வேண்டும். அந்த அனுபவம் எனக்கும் உண்டு. என்னால் முடிந்தவரை துரிதமாக முடிக்க முயற்சிக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால் நாளைய இரவு ஒரு சுவிசேஷ பொருளை எடுத்து பிரசங்கிக்கலாம் என்று விரும்புகிறேன். நாளைய இரவு, கர்த்தருக்கு சித்தமானால். இன்றிரவு, ஒரு சில வசனத்தை வாசித்து சில மேற்கோள்களை பின்னனியாக மாத்திரம் கொடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இங்கிருக்கிற எல்லோரும் எனக்கு அன்னியர்களும், ஒருவரும் இந்த செய்தியை குறித்து ஒன்றும் அறியாமலும் இருக்கிறீர்கள். அதன் பிறகு நீங்கள் செய்தியை புரிந்து கொள்ளாமல், இவைகளை குறித்து ஒன்றும் தெரியாமல்,அறைகுறையாக ஒரு ஒழுங்கற்ற முறையில் அணுகுவீர்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இது இந்த நாளுக்கென்று கொடுக்கப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தம். வெஸ்லியின் நாட்கள் ஒருபோதும் இன்று வேலை செய்யாது. லூத்தரின் நாட்கள். . . லூத்தர் கூட்டத்தாரை குறித்து என்ன? மக்கள் லூத்தரின் ஒளிர்வு வெளிச்சத்தில் (glare) இருக்கிறதை கண்டு தேவன் வெஸ்லியை எழுப்பினார். வெஸ்லி கூட்டத்தாரைக் குறித்து என்ன? பெந்தெகோஸ்தே எழும்பின பின்னரும் வெஸ்லியின் ஒளிர்வு வெளிச்சத்தில் (glare) இருந்து வந்தார்கள். இப்பொழுது பெந்தெகோஸ்தேயினரை குறித்து என்ன? அவர்கள் பெந்தெகோஸ்தே ஒளிர்வு வெளிச்சத்தில் இருக்கிறார்கள். ஒளிர்வு என்பது ஒரு ஒளியின் பிரதிபலிப்பாக இருக்கிறது. அது சாலையில் இருக்கும் கானல் நீரை போன்றதாகும். அங்கே இருக்கின்ற ஒளிர்வு அதினுடைய ஒளியை பிரதிபலித்தது. அதே காரியம் தான் அவர்கள் இயேசுவை தள்ளிப் போடும்படி செய்தது. அவர்கள் நியாயப்பிரமாணத்தின் ஒளியாகிய வேறொரு வெளிச்சத்தின் ஒளிர்வில் இருந்தார்கள். அவர்களுடைய சொந்த தீர்க்கதரிசிகளே அவர் எப்படி இருப்பார், எப்படி அடையாளங் கண்டு கொள்ளப்படுவார் என்று சரியாக சொன்ன போதிலும் அவர்கள் மேசியாவை இனங்கண்டுகொள்ள தவறினார்கள். சரியாக அவர் என்னவாக இருப்பார் என்று அவர்கள் சொன்னார்களோ அவ்விதமாகவே இருந்தார். அவர்கள் வேறொருநாளின் ஒளிர்வில் ஜீவித்ததினால், அவரை காணத் தவறினார்கள். நண்பர்களே இன்று 'வேதத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் எந்த கதாபாத்திரம் உங்களுடைய தற்போதய நிலையை அடையாளப்படுத்தும்“ என ஆலோசிக்கிறேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் பெரிய மத குழுக்கள் எல்லாம் எவ்வளவு வைராக்கியம் உள்ளவர்களாகவும் மகத்தானவராகவும் இருந்தார்கள். இப்பொழுது சற்று சிந்தியுங்கள். இயேசு பூமியின் மேல் இருப்பாரானால் எந்த பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள்? எந்த ஒரு சபையும் அவரை உள்ளே வரும் படி அனுமதிக்காது. ஒரு சில நண்பர்களை தவிர யாரும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த கடைசி காலத்தில் மறுபடியுமாக அப்படி நடக்கும் என்று வாக்குரைக்கப் பட்டிருக்கிறதை என்று அறியீர்களா? அது சரியே. மற்றும் அந்நாளிலே அவர் கல்வி அறிவில்லாதவரும், முறை தவறி பிறந்த நபராகவும் அறியபட்டிருக்க வேண்டும் என்று தெரியுமா? அதை அறிந்திருக்கிறீர்களா? அவர் சிந்தை இழந்த நபராய் அறியபட்டிருக்க வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்களா? ஓர் நாள் அவரை சுற்றி நோக்கிப் பார்த்த போது அனேகர் அவரோடு இருக்கிறதை கண்டு 'நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்று அவருடைய சீஷர்களிடத்தில் சொன்னார். அதைக் குறித்து மருத்துவரோ அல்லது ஒரு விஞ்ஞானியோ, அல்லது புத்திசாதுரியமான நபரோ, அல்லது ஒரு அறிவாளியோ என்ன நினைத்திருக்கக் கூடும்? 'இந்த மனிதன் ஒரு இரத்தம் உறிஞ்சும் கொடூரன். இவன் நம் எல்லோரையும் கொடூரனாக மாற்றிவிட முயற்சிக்கிறான்“. மனிதனுடைய இரத்தத்தைக் குடிப்பதா? புசிப்பதா? அவர் ஒரு போதும் விளக்கிச் சொல்லவில்லை. அவர் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு உண்மையான அசலான முன்குறிக்கப்பட்ட வித்து அதை பிடித்துக் கொள்ளும். அதை நேற்றைய இரவிலே பேசின ஸ்திரீக்குள்ளாக இருந்ததைக் கண்டோம். அவளுடைய சுகவீன மான நிலையிலேயும் அது என்னவென்று துரிதமாக கண்டுபிடித்தாள். அதன் பிறகு சீஷர்களாக இருக்கும்படி அழைத்த எழுபது மனிதர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து 'மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?“ என்று சொன்னார். 'மேலே ஏறிப் போகிறதா? அவரை ஆட்டின தொட்டிலை நாங்கள் கண்டிருக்கிறோம். அவருடைய தாயை அறிந்திருக்கிறோம். அவர் பிறந்த தொட்டிலை நாங்கள் அறிவோம். அதே பட்டணத்திலிருந்துதான் நாங்களும் வந்திருக்கிறோம். அவர் எங்களோடு மீன் பிடிக்கிறது மற்றும் சில காரியங்களை செய்திருக்கிறார். ஏன், நாங்கள் . . . ?“ நல்லது, அவரை விசுவாசிப்பது அவர்களுக்கு மிக கடினமான காரியமாக இருந்தபடியால் அவர்கள் அங்கிருந்து கடந்து போனார்கள். அதன் பிறகு பன்னிருவரை பார்த்து 'பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்“அதன் பிறகு 'நீங்களும் போக விரும்புகிறீர்களா” என்று அவர்களிடம் கேட்டார். இப்பொழுது அதை அவர் ஒருபோதும் விளக்கிச் சொல்லவில்லை. அவருடைய மாமிசம் என்ன என்றும் அவருடைய இரத்தம் என்ன என்றும் அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர் எப்படி கீழே இறங்கி வந்தார் என்றும், எப்படி திரும்பவும் போகப் போகிறார் என்றும் அவர்களுக்கு ஒரு போதும் விளக்கிச் சொல்லவில்லை. கவனியுங்கள். அது மட்டும் சீஷர்களாலும் கூட அதை விளக்கி சொல்ல முடியவில்லை. ஆனால் அதை விசுவாசித்தார்கள். அவர்களால் அதை விளக்க முடியவில்லை. அந்த ஜீவியத்திற்காகவே அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களால் அதை விளக்க முடியவில்லை. பேதுரு அவரை நோக்கி 'நாங்கள் எங்கே போவோம் ஆண்டவரே“ என்றான். அந்த மணிவேளையின் செய்தியை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது எவ்விதமாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். 'நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில், உம்மிடத்தில் மாத்திரம் உண்டே, நாங்கள் போகத்தக்க வேறு எந்த இடமும் இல்லை” என்று சொன்னார்கள். இன்று வேதாகமமாகிய கிறிஸ்துவினிடத்தில் போவதை தவிர வேறு எங்கே போகக்கூடும்? அவரே வற்றாத தேவஊற்று. எவ்வளவு அதிகம் அதிலிருந்து எடுக்கிறோமோ, அவ்வளவு அதிகம் புத்துணர்சியாகவும், நன்மையாகவும் இருக்கும். இப்பொழுது ஒரு வசனத்தை அல்லது ஒரு சில வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். அதன்பிறகு நாம் நேரடியாக செய்திக்குள் செல்லலாம். கூடுமானால் ஒன்பது மணி அல்லது அதற்கும் சிறிது கழித்து முடிந்தால் இங்கிருந்து கடந்து போக முயற்சிக்கலாம். இது முப்பது அல்லது முப்பத்தைந்து நிமிடங்கள் இருக்கும்.ஏறக்குறைய முப்பது அல்லது முப்பத்தைந்து நிமிடங்கள் நமக்கு இருக்கிறது. இப்பொழுது மத்தேயு பன்னிரண்டாம் அதிகாரத்தை வாசிக்கிறதான நேரத்தில் நாம் எழுந்து நிற்போமா‚ இப்பொழுது பயபக்தியுடன் தலையை தாழ்த்தியிருக்கிறதான வேளையில், பரிசுத்த மத்தேயு 12-ம் அதிகாரம் 38-ம் வசனத்திலிருந்து வாசிக்கலாம். அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே,உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்திரமாக: இந்த பொல்லாத விபச்சாரச்சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள், ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவார்கள். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலெமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலெமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ...இதோ, சாலெமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். நாம் ஜெபிப்போம். 2கர்த்தாவே “இதோ” என்றால் 'நோக்கிப் பார்“, ”கவனம் செலுத்து“ என்று அர்த்தமுடையதாய் இருக்கிறது. இன்றிரவு எல்லோரிலும் பெரியவர் தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார்” என்ற வார்த்தைகளை நினைவு கூறுவோமாக. இவர்கள் விசுவாசத்தை கொண்டிருக்கும்படியாக நீர் இந்த வார்த்தைகளை எடுத்து மக்களுடைய இருதயத்திற்கு அபிஷேகித்து “இதோ, நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணினபடி தான் ஜீவனோடு இருக்கிறீர் என்று இவர்களுக்கு காணும்படியான ஆசீர்வாதங்களை கோருகிறோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3சில நிமிடங்கள் நாம் “காலத்தின் வேதவாக்கியங்களின் அடையாளங்கள்” என்பதைக் குறித்து பேச உள்ளோம். இப்பொழுது அந்த சந்ததியார் அவருடைய வேத வாக்கியங்களின் அடையாளத்தை விசுவாசிக்காததினால் இயேசு அவர்களைக் கடிந்துகொண்டிருந்தார். இந்த பரிசேயர்களை கவனியுங்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: 'போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்“என்று சொன்னார்கள். அவர்களுடைய குருட்டுத்தனத்தை கவனியுங்கள். அடையாளமானது ஏற்கனவே நிறைவேறப்பட்டிருக்க, அவர்களோ அதை இனங்கண்டு கொள்ளவில்லை. உங்களுக்குத் தெரியுமா, நான் இப்படியாக விசுவாசிக்கிறேன், ஒரு நாளில் எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும். ஆனால் மக்கள் அதைக் குறித்து சிறிதும் அறியாமல் இருப்பார்கள். மத்தேயு 11-ம் அதிகாரத்தில் யோவானுடைய சீஷர்கள் இயேசுவைக் காணும்படி வந்து பார்த்து திரும்பிச் சென்றபின், இயேசு அங்கிருந்த ஜனங்களைப் பார்த்து 'எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்?காற்றினால் அசையும் நாணலையோ? அல்லது, மெல்லிய வஸ்திரம் தரித்த மனுஷனையோ, அல்லது தீர்க்கதரிசியையோ?“ என்று சொன்னார். அதற்கு அவர் ”ஆம் அவர் தீர்க்கதரிசியே“ என்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன். இப்பொழுது நீங்கள் இவரை ஏற்றுக் கொள்வீர்களானால், 'நான் எனக்கு முன்பாக தூதனை அனுப்புகிறேன் என்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டவன் இவனே” என்றார். 4ஒரு நாளில் அவர் தன்னை மனுஷ குமாரன் என்று சொல்லிக் கொண்டிருந்த போது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: 'அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேத பாரகர்கள் சொல்லுகிறார்களே, அதெப்படி?“என்று கேட்டார்கள். இப்பொழுது மல்கியா 3-ம் அதிகாரத்தில் கவனியுங்கள், 'இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன் அவன் எனக்கு முன்பாகப் போய்“ என்று சொல்லியிருக்கிற வசனத்தை இயேசு சுட்டிக்காட்டினார். மல்கியா 4-ம் அதிகாரத்தை அல்ல, ஏனென்றால் அது வேறு ஒரு காலத்திற்கென்று குறிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், 'இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன் அவன் எனக்கு முன்பாகப் போய்” என்று மல்கியா 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது ஒரு காலம், மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது வேறு காலம். மல்கியா 4-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டபடி அவர் வரும்போது 'உலகம் அழிந்து, நீதிமான்கள் சாம்பலின் மேல் நடந்து ஆயிர வருடஅரசாட்சிக்குள் நடந்து போவார்கள்“. இவ்விதமாக யோவான் வந்து சென்றதிலிருந்து நாம் அதைச் செய்யவில்லை. ஆனால் கடைசி காலத்திற்கென்று கொடுக்கப்பட்ட தூதன் வந்து மூல சுவிசேஷத்திற்கு எருசலேமிலே இருந்த புதிய சபையை போன்று, ஆதி பிதாக்கள் கொண்டிருந்த விசுவாசத்திற்கு மக்களுடைய இருதயத்தை, அந்த மூல சுவிசேஷத்திற்கு திருப்பின பின்னரே இது சம்பவிக்கும். அது இந்த கடைசி நாட்களில் திரும்பவும் அளிக்கப்படும். சிறு கூட்டத்தாருக்கு மாத்திரமே அது திரும்பவும் அளிக்கப்படும். மற்றும் அந்த குணாலட்சனமானது எலியா, யோவானைப் போலவே இருக்கும் இருவருமே வனாந்திரத்தை விரும்புகிறவர்களாயும், ஸ்திரீகளை வெறுக்கிறவர்களாயும், ஸ்தாபனத்தை கடிந்து கொள்ளுகிறவர்களாயும் இருந்தார்கள். அவர்களைப் போலவே, இந்த நபரும் இருப்பார். அதுமட்டும் அல்லாமல், இவர் சத்தியத்தை உடையவராகவும், நிரூபிக்கப்பட்டவராகவும் இருப்பார். சத்தியத்துடன் இணங்கண்டு கொள்ளப்பட்டவராகவும் இருப்பார். இதுவே வாக்கு உரைக்கப்பட்டிருக்கிறது. 5இயேசு அவர்களிடம் திரும்பி 'எலியா ஏற்கனவே வந்தாயிற்று என்று உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களோ அறியாமல் போனீர்கள்“ என்று சொன்னார் என்பதை நாம் அறிவோம். இந்நாட்களில் ஒன்றில் சபையானது உபத்திரவ காலத்திற்குள் இருப்பதை காணும்பட்சத்தில் நம்மை மிகவும் வருத்தமடைய செய்யாதா? இப்பொழுது ஒரு உபதேசத்தைக் குறித்து பிரசங்கிக்கும்படி வரவில்லை. நான் அப்படி செய்வதில்லை. நான் என்னுடைய சகோதரர்களை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்றால் நான் இதை மாத்திரம் சற்று சொல்லட்டும். தனிப்பட்ட வகையில், என்னை பொருத்தமட்டில், சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்லும், ஆனால் மணவாட்டி அல்ல என்று உறுதியாக விசுவாசிக்கிறேன். மணவாட்டி வீட்டிற்கு செல்லுவாள். பாருங்கள், தேவன் எகிப்து தேசத்திலிருந்து, ஒரு தேசத்தை எப்படி வெளியே அழைத்தாரோ 'அவ்விதமாகவே மணவாட்டியையும் சபையிலிருந்து வெளியே அழைத்து கொண்டு வருகிறார். புரிந்துக் கொண்டீர்களா? மணவாட்டியானவள் தெரிந்து கொள்ளப்பட்டவள், அவளோ ஸ்திரீயின் வித்தில் மீதியானவர்கள். இவ்விதமாக தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பது அவருடைய சித்தம். அவருடைய முறைமையை எங்கு வைக்க வேண்டும் என்பது அவருடைய அலுவலாய் இருக்கிறது. மீதமுள்ளவர்களை தேவன் முறைமையிலிருந்து (pattern) வெட்டியெடுக்கிறார். ஸ்திரீயின் வித்தானது காரிருளுக்குள் சென்றது. அது சரியே. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சபை அல்ல. அவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் இருந்ததினாலே நியாயந் தீர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டும் இருக்கிறார்கள். வேறு எதினூடாகவும் கடந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள் அதற்குள் இல்லாததினாலே நியாயத்தீர்ப்பிற்குள் கடந்து செல்லவேண்டியதாய் இருக்கிறது. 6இந்நாள் ஒன்றில், அந்த சிறுபான்மையானோர், நோவாவின் நாட்களில் எட்டு ஆத்துமா தண்ணீரிலிருந்து இரட்சிக்கப்பட்டது போலவே மனுஷக்குமாரன் வருகையின் நாட்களிலும் நடக்கும். மற்றும் லோத்தின் நாட்களில் மூன்று ஆத்துமா அக்கினியிலிருந்து இரட்சிக்கப்பட்டது போலவே மனுஷக்குமாரன் வருகையின் நாட்களிலும் இருக்கும். உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய காரியம் நடைபெறும் என்று, வேதத்தில் குறிப்பிடப்படாமலிருந்தும் அவ்விதமாக எதிர்பார்க்கிறார்கள். பாருங்கள்? அவர்கள் இப்படியாக “சபை அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் என்று வேதம் சொல்லிற்று என்று நினைத்தோமே” என்று ஓர் நாளில் சொல்லுவார்கள். ஆனால் மணவாட்டியோ அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுவாள். இதை சிந்தித்து பாருங்கள், “நோவாவின் நாட்களில் நடந்தது போல ”நோவா கடந்து பேழைக்குள் பிரவேசித்த பிறகு கதவானது அடைக்கப்பட்டது. அவன் மே மாதம் பதினேழாம் தேதி அன்று உள்ளே பிரவேசித்த பிறகு கதவானது அடைக்கப்பட்டது. அதன் பின் அவன் உள்ளே சென்ற பிறகும் ஏழு நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தது. அவர்களோ அதை பற்றி அறியாமல் இருந்தார்கள். கர்த்தரே கதவை அடைத்தார். 7ஓர் நாளிலே இரக்கத்தின் கதவு மூடப்படும். இருப்பினும் மக்கள் தொடர்ந்து தாங்கள் இரட்சிக்கப்படுகிறோம் என்று எண்ணிக் கொண்டு பிரசங்கங்களும் மற்ற காரியங்களும் செய்து இரக்கத்தை இழந்தோம் என்பதை கடைசி முறையாக புறக்கணிக்கும் மட்டும் அதை அறியாமல் இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள், உலகம் முழுவதிலும் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. 'இருவர் களத்தில் இருப்பார்கள், ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார், இருவர் படுக்கையில் இருப்பார்கள், ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்“.ஆகவே உலகம் முழுவதிலும் அனேகர் அதிலே தப்பிப் போகமாட்டார்கள். எடுத்துக் கொள்ளப்படும் மணவாட்டியே தப்பிப்பாள். அடையாளங்களை நினைவு கூறுங்கள். இஸ்ரவேல் எப்பொழுதுமே புத்தி சாதுரியமான பேச்சின்மேல் சாராமல் அடையாளங்களின் மேலேயே சார்ந்திருந்தார்கள். அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டும். தேவன் அவர்களுக்கு தீர்க்கதரிசிகளை அனுப்பினார். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு அடையாளங்களை கொடுத்தார்கள். மற்றும் எப்பொழுது எல்லாம் ஒரு அடையாளம், அதாவது வேத வாக்கியத்தின் அடையாளம் கொடுக்கப்படுகிறதோ, அப்பொழுது எல்லாம் அந்த வேத வாக்கியத்தின் அடையாளத்தை பின் தொடர்ந்து வேதவாக்கியத்தின் சத்தம் (Scriptural Voice) இருந்தாக வேண்டும். அவை எல்லாமே வேத வாக்கியத்தின் படியாகவும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபடியாகவும் இருந்தாகவேண்டும். ஆகவே பாருங்கள், நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாணியை கடைப்பிடிக்கிறீர்கள். நீதிமானாக்கப்படுதல் செய்தியோடு லூத்தர் வந்தபோது, (அவர் அதை மாத்திரமே அறிந்திருந்தார்) மக்கள் அதிலே திருப்தி கொண்டு அதை ஒரு தனி போதனையாக ஸ்தாபித்தார்கள். தொடர்ந்து பரிசுத்தமாக்கப்படுதல் செய்தியோடு வெஸ்லி வந்தபோது அதுவும் ஒரு ஸ்தாபனம் ஆனது . அதை தொடாந்து வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலோடு பெந்தகொஸ்தேயினர் வந்தபோது அவர்களும் அதை ஸ்தாபனமாக்கினார்கள். ஆனால் தேவனோ எல்லா சமயத்திலும், எல்லா நாட்களிலும், ஒவ்வொரு சபை காலத்திலிருந்தும் கடந்து போய்க் கொண்டிருக்கிறார். 8மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு கரும் பலகையில் சபைகாலங்கள் எப்படியாக விழுந்து போகும் என்றும்,எப்பொழுது அமிழ்வார்கள் என்றும், எப்பொழுது எழுவார்கள் என்றும் வரைந்துகாட்டும்படி, தேவன் எவ்வளவாய்அனுமதித்திருக்கிறார். இதோ இன்றிரவு அந்த ஆச்சரியமான படத்தை,அந்த புத்தகத்தில் இருக்கிறதைகாண்கிறீர்கள். அதை வரைந்து முடித்தவுடனே, அந்த மகத்தான கர்த்தருடைய தூதனானவர்,அந்த ஒளி தத்ரூபமாக இங்கு அனேகர் உட்கார்ந்திருக்கிறதை போன்று வந்து வலது பக்கமாக சுவற்றின் அருகாமையில் நின்றார். அதை கண்டு மக்கள் மயங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். அவரே அந்த சுவற்றில் வரைந்தார். சரியாக மூன்று வருடங்கள் கழித்து முதல் முறையாக போப் ரோம நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக சந்திரன் இருளடைந்தது. சபையும் உலக ஐக்கிய சங்கமும் தயாராகும் போது... ஓ‚ சகோதரனே,சகோதரியே, நான் அதைப் பற்றி சொல்ல ஆரம்பிக்க விடாதேயுங்கள்‚ நாம் சரியாக இங்கே கடைசி நாட்களில் இருக்கிறோம். எல்லா அடையாளமும், எல்லாமுமே கச்சிதமாக இருக்கிறது. 9தேவன் அடையாளங்களை கொடுக்கிறார் வேதவாக்கியத்தின் அடையாளங்கள், அது ஒரு சத்தத்தின் வேதவாக்கிய அடையாளங்களாய் இருக்கிறது. நினைவு கூறுங்கள் மோசே வந்த போது. . . எதற்காக அடையாளம் கொடுக்கப்படுகிறது? கவனத்தை ஈர்க்கும்படியாக கொடுக்கப்படுகிறது. அடையாளமானது கவனத்தை ஈர்க்கும்படியாக கொடுக்கப்படுகிறது. மற்றும் அந்த அடையாளம் எந்த சத்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்றால் அந்த அடையாளம் சரியானது அல்ல. மற்றும் அந்த அடையாளமானது எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து போன பழைய மார்க்க சம்பந்தமான சத்தத்தையே கொடுக்கும் என்றால் அது தேவனிடத்திலிருந்து வரவில்லை மற்றும் அந்த மாறுதல் வேதவாக்கியத்தின் அடையாளமாகவும் வேத வாக்கியத்தின் சத்தமாகவும்இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை ஸ்தாபன சத்தம் பின் தொடர்ந்தது என்று சொல்வோமானால், அவ்விதமாக தேவன் ஒரு போதும்அனுப்பினதில்லை. இவ்வளவு காலமாக நாம் ஸ்தாபனங்களை கொண்டிருந்தோம். இப்பொழுதோ அவ்விதத்திலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். அது வேதாகமத்தின் படியாக கர்த்தர் உரைக்கிறதாக இருக்க வேண்டும். தேவன் அதை வார்த்தையின் மூலமாக வாக்குத்தத்தம் பண்ணி மக்களுடைய கவனத்தை அந்த வாக்குத்தத்தத்திற்கு இழுக்கும்படியாக, ஒரு அடையாளத்தை கொடுக்கிறார். அதன்பின் சத்தம் (voice) அதை பின்தொடரும். அப்பொழுது அதுவே அதனோடு உபதேசமாகச் செல்கிறது. 10இயேசு ஒரு நல்ல பேர் பெற்ற மனிதனாக இருந்தார். ஒரு வாலிப ரபியாக, கலிலேயாவின் தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தி மற்றும் அது போன்ற காரியங்களை செய்யும் போது ஒரு மகத்தான மனிதராய் என்னப்பட்டார். ஆனால் ஒரு நாளில் அவர் உட்கார்ந்து, 'நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்“ என்று பேசத் துவங்கினார். அதுவே அந்த அடையாளத்தை பின் தொடர்ந்த சத்தமாகும். ஓ‚ ஆனால் அவர்களுக்கோ அதில் விருப்பம் இல்லை. அவர்கள் அடையாளத்தை ஏற்றுக்கொள்ள மனதாய் இருந்தார்கள். ஆனால் சத்தத்தை ஏற்றுக்கொள்ள மனதில்லை. 'மனுஷ குமாரன் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவர் எடுத்துக்கொள்ளப்படுவார்” என்று சொன்னபோது அவர்களால் அதை பார்க்க முடியவில்லை. பாருங்கள்? ஆனால் சத்தம் அடையாளத்தை பின் தொடர்ந்த போது அதினோடு அவர்கள் எந்த சம்பந்தமும் கொள்ள மனதில்லாதிருந்தார்கள். எப்பொழுதுமே சத்தமும் அடையாளமுமாக இருக்கிறது. 11மோசே அவருடைய பாதரட்சையை கழற்றிப் போட்டதற்கான காரணம் என்னவென்றால் அந்த அடையாளம் அவனுடைய கவனத்தை ஈர்த்தது. அவன் அதை நோக்கிப் பார்த்த போது ஒரு மரம் அக்கினியினால் எரிந்து கொண்டிருந்தது. இப்பொழுது மோசே ஒரு ரசாயன நிபுணராக இருந்தான் அவன் ஒரு பெரிய விஞ்ஞானி. எகிப்தியருடைய எல்லா ஞானத்திலும் போதிக்கப்பட்டிருந்தான். விஞ்ஞானத்தில் அவர்கள் செய்ததை போன்று நம்மால் செய்ய முடியாது - கூர்நுனி கோபுரம் கட்டுதல், சிலைகள் கட்டுதல், பிணத்தை பதப் படுத்தும் பொருட்கள் இவைகளெல்லாம் நம்மிடத்தில் இல்லை. நிறச்சாய ரசாயனம் நம்மிடத்தில் இல்லை. இன்றைக்கு இருக்கிற நாகரிகத்தையும் கல்வியையும் காட்டிலும் மேம்பட்டவர்களாய் இருந்தார்கள். மற்றும் மோசே அவை எல்லாவற்றிலும் தேறினவனாய் இருந்தான். அந்த மரம் அக்கினி ஜீவாலையினால் எரிந்தும் எரிக்கப்படாமல் இருக்கிறதையும் கண்டு அவன் அவனுடைய இருதயத்தில் “நான் சென்று அதிலிருக்கிற சில இலைகளை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு சென்று எந்த ரசாயனம் இந்த மரத்தில் தெளிக்கப்பட்டிருக்கிறது என காணப் போகிறேன்” என்று ஒருவேளை சொல்லியிருப்பான் என்றால், அதில் எந்த சந்தேகமுமில்லை. அந்தப்படி அவன் மட்டும் செய்திருந்தால் அந்த சத்தம் ஒருபோதும் அவனோடு பேசியிருக்காது. 12உங்களால் தேவனை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய அருகில் உட்கார்ந்து அவரோடு பேசித் தீர்க்க வேண்டும். உன்னுடைய பாதரட்சைகளை கழற்றிப் போடு என்று சொன்னது பார்ப்பதற்கு உன்னுடைய கல்வியை கழற்றி வை என்று சொல்வதாக இருக்கிறது. அவருடைய வார்த்தையை நோக்கி “யார் என்ன சொன்னாலும் அதை குறித்து எனக்கு அக்கரை இல்லை. நீர் இந்த நாளுக்கென்று என்ன வாக்கு கொடுத்தீரோ அது உண்மை” என்று சொல்லுங்கள். மோசே தன்னுடைய பாதரட்சைகளை கழற்றி வைத்தான். அதிலிருந்து வந்த அந்த சத்தத்தை கவனியுங்கள். அது வேதவாக்கியத்தின் சத்தமாக இல்லாதிருந்தால் மோசே அதை விசுவாசியாமல் இருந்திருப்பான். அடையளம் கவனத்தை இழுத்தது. மற்றும் அடையாளமானது தீர்க்கதரிசியின் கவனத்தை இழுக்கும்படியாகவே கொடுக்கப்படுகிறது. ஒரு தீர்க்கதரிசியே அடையாளமாக இருக்கிறார். தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பும் போது, கவணமாயிருங்கள்: அதைத் தொடர்ந்து நியாயத்தீர்ப்பு வரும். அது எப்பொழுதும் அவ்விதமாகவே இருக்கிறது. அது எப்பொழுதும் அவ்விதமாகவே இருக்கும். வேறு வழியே இல்லை. அது எப்பொழுதும் மக்களின் மேலாகவே சென்று விடுகிறது. காலம் கடந்து போகுமட்டும் அவர்கள் அதை அறியாமல் இருப்பார்கள்.இயேசு இவ்விதமாக சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 'நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, அதை வெள்ளையடித்தீர்கள். ஆனால் அவர்களை கல்லறையில் வைத்தது நீங்களே உங்கள் பிதாக்கள் செய்தது போல நீங்களும் செய்வீர்கள்“ என்றார். அந்தப்படியே அவர்கள் செய்தார்கள். 13நாம் இப்பொழுது இந்த காட்சியிலே மோசே எழுந்து வருகிறதை பார்க்கிறோம். அந்த முட்செடியைப் பார்த்து, அதற்கு அருகில் சென்றான். அப்பொழுது அதிலிருந்து ஒருசத்தமானது “உன்னுடைய பாதரட்சையை கழற்றிப் போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்று சொன்னது. அவன் தன்னுடைய பாதரட்சையை கழற்றி அங்கே முழங்கால் படியிட்டான். அதன் பின் “நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவன்” என்றார். அங்கே அந்த வேதாகமத்தின் சத்தம் வந்தது. 'நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை நினைவு கூறுகிறேன் மற்றும் என் ஜனங்களுடைய உபத்திரவத்தை பார்க்கிறேன். ஆகவே என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்து உன்னை அங்கு அனுப்புகிறேன். உன்னை என்னுடைய சத்தமாகவே ஆக்குகிறேன்“, என்றார். ”இரண்டு அடையாளங்களை உனக்கு நான் கொடுப்பேன். அதில் ஒன்று உன்னுடைய கரத்தில் இருக்கும் கோல், அதை நீ எடுத்து சர்ப்பமாக மாற்றுவாய்“. அடுத்து, அவனுடைய கையை தன் மார்பிலே போடும் போது ஒரு தெய்வீக சுகம் நிகழும். இப்பொழுது “அவர்கள் முதலாவது அடையாளத்தின் சத்தத்தை விசுவாசியாமல் இருப்பார்களானால் அப்பொழுது இரண்டாம் அடையாளத்தின் சத்தத்தை நம்புவார்கள். அதையும் அவர்கள் விசுவாசியாமல் இருப்பார்கள் என்றால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக,அது இரத்தமாக மாறும். அவ்வளவு தான் அந்த இரத்தம் அவர்களை முழ்கடித்துவிடும். எகிப்தின் கதை அத்துடன் முடியும்“. நாமும் கூட முதலாவது மற்றும் இரண்டாவதை பெற்றிருக்கிறோம். அடுத்தது இரத்தத்தினால் முழ்கடிக்கிறதாய் இருக்குமா என்று வியக்கிறேன். நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று இன்றிரவு வியக்கிறேன்? சத்தங்களும் அடையாளங்களும், தேவன் அவர்களுக்கு அடையாளங்களைக் கொடுக்கிறார். சற்று நேரம், நாம் கண்டிருக்கிற இந்த வேதாகம சத்தங்களையும் அதினுடைய வியாக்கியானமும் எப்படி நிறைவேறினது என்று சிந்தித்துப் பாருங்கள். 14ஆனால் இப்பொழுதோ இந்த மகா குழப்பமான நேரத்தில் மக்களுடைய கண்கள் மங்கிப்போய் “நான் இந்த கூட்டத்தாரை சேர்ந்தவன், அந்த கூட்டத்தாரை சேர்ந்தவன்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதற்கும் தேவனுக்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இல்லவே இல்லை. ஒவ்வொரு காலத்திலும் தேவன் தன்னுடைய அடையாளங்களை அனுப்பினார். இயேசுவானவர் அவருடைய வருகைக்கு முன்பாக அடையாளங்களை காட்டுவார் என்று சொன்னார். மக்கள் எப்பொழுதும் வேதாகம அடையாளங்களை விசுவாசிக்க நினைவு கூர வேண்டும். அவை வேதாகம அடையாளமாக இணங்கண்டு கொள்ளப்பட வேண்டும். தேவன் எப்பொழுதும் . . . நான் நேற்று இரவு சொன்னது போல, சபையானது எல்லாவற்றோடும் கலந்து போன பிறகு தேவன் ஒரு நபரை அபிஷேகிக்கிறார்; ஒவ்வொரு நபரும் இன்னொருவரிலிருந்து வேறுபட்டிருக்கிறார். தேவன் ஒருவராய் இருக்கிறதினால் அவர் ஒரு நபரையே அபிஷேகிக்கிறார். அவர் ஒரு போதும் ஒரு குழுவை பயன்படுத்தினதில்லை. அவர் எப்பொழுதும் ஒருவரையே பயன்படுத்துகிறார். எப்பொழுதும் அப்படியே செய்திருக்கிறார். அவர் ஒருபோதும் தன்னுடைய பாணியை மாற்றுவதில்லை. ஒருவரையே பயன்படுத்துகிறார். மற்றும் அந்த ஒருவரை அனுப்பி செய்தியை அவர்களுக்கு பிரசங்கிக்கிறார். அதுவோ அப்பட்டமாக புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அந்த சந்ததியில் இருந்து வரவேண்டியவைகள் யாவுமே வரும். முதல் ஜாமம், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பிறகு ஏழாவது அதன் பின் மணவாளன் வருவார். இப்பொழுதுநாம் சரியாக ஏழாவதில் இருக்கிறோம். 15இப்படியாக இங்கு இந்த ஸ்தாபன சபைகளெல்லாம் இயங்குகிறதை பார்க்கிறோம். இங்கே இருக்கிற இந்த கிறிஸ்துவ வியாபார சங்க கூட்டத்தாரே அன்று இரவு உங்களுடைய வியாபார புருஷர்கள் புத்தகத்தில் “பரிசுத்த தந்தையாகிய இன்னார் இன்னார்” என்று அந்த புத்தகத்தில் போடப்பட்டிருந்ததே, உங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். பெந்தெகொஸ்தேயராகிய நீங்கள் இவ்விதமாக நாம் யாரையும் “தந்தை” என்று இந்த உலகத்தில் அழைக்கக்கூடாது என்று அறிந்திருக்கவில்லையா? இது எதை காட்டுகிறது என்றால் ஏதோ ஒரு ஒளிர்வு உங்கள் கண்களை குருடாக்கி போட்டதை காட்டுகிறது. ஆம். மேலும் மக்களே, வேதமானது, அந்த மீதமுள்ள புத்தியில்லாத கன்னிகை எண்ணையை வாங்கும்படி சென்ற போது அவர்கள் பெறாமல் போனார்கள் என்று கூறினதை நீங்கள் உணரவில்லையா? ஒருவேளை அவர்கள் ஆவியிலே நடனமாடி, அன்னிய பாஷையில் பேசி இருக்கலாம். ஆனால் அவ்விதமாக பிசாசுகள் செய்கிறதையும் நான் கண்டிருக்கிறேனே. ஆகவே அப்படி செய்கிறதினால் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பரிசுத்த ஆவியைக் குறித்து பேசுகிறேன். வேதாகம பரிசுத்த ஆவியை குறித்து. 16அவற்றினை அன்னியர்களுடைய தேசத்தில் கண்டிருக்கிறேன். நான் ஏழு முறை உலகத்தை சுற்றி வந்திருக்கிறேன். எல்லா வகையான அன்னிய தேசத்தார்களிடத்திலும் சென்றிருக்கிறேன். ஒரே சமயத்தில் ஒரு லட்சம் மக்கள், லட்சத்து ஐம்பதாயிரம் அல்லது ஐம்பதாயிரம் மக்கள் கூடி வந்திருந்தார்கள். அங்கே எவ்விதமாக அந்த சூனியக்காரர்கள் மற்றும் மற்றவர்களும் சவால் விடுகிறார்கள் என்று கண்டிருக்கிறேன். ஆகவே நீ எதைக் குறித்து பேசுகிறாயோ அதை பற்றி அறிந்தவராய் பேசுவது நல்லது. வெறும் புத்தி சாதுரியமான பேச்சை மட்டும் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எதை பேசுகிறீர்களோ அதை தேவன் ஆதரிக்க ஏதுவாய் பேசினால் நல்லது. இல்லை என்றால் களத்தில் இறங்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏனென்றால் அவர்கள் உங்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்குவார்கள். 17ஆனால் நம்முடைய தேவன் இன்னும் எலியாவின் தேவனாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டிருங்கள். அவர் எப்பொழுதும் இருந்தது போலவே இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவர் மாறாத தேவனாக இருக்கிறார். அவர் அதே சுழற்சியில் தான் கிரியை செய்கிறார். அதே காரியத்தை தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். அங்கே வாயடைத்து, ஸ்தம்பித்து வந்தவர்கள் களத்தை விட்டு விலகி போனார்கள்.தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார். இப்பொழுது இதை கவனியுங்கள், இந்த விதமாக காரியங்கள் இந்த கடைசி காலத்தில் நடக்கும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். கச்சிதமாக இவைகளெல்லாம் அவருடைய வருகையின் அடையாளமாக காண்கிறோம். எல்லாமுமே‚ நாம் இந்த உலகத்தின் முடிவில் இருக்கிறோம் என்று எல்லோருமே ஒத்துக்கொள்ளுவோம். இருப்பினும் அவர் இந்த கடைசி நாளில் சபைக்கு இறங்கி வந்து அவருடைய சரீரமாகிய சபைக்கு, மணவாட்டிக்கு செய்ய இருப்பதை செய்யும்போது, நம்முடைய மூக்கை உயர்த்திக் கொண்டு கடந்து சென்று விடுகிறோம். பாருங்கள்,அது அந்தப்படியாக தான் இருந்தாக வேண்டும். உலகமானது அதை கண்டு அவர்களுடைய மூக்கை உயர்த்திக் கொண்டு கடந்துசெல்லுகிறது. பிறகு அதை புறக்கணிக்க முயற்சிக்கிறார்கள். 18இந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை பாருங்கள். பெந்தெகொஸ்தேயினர் அனேகர் புதன் இரவிலே உங்களுடைய கிறிஸ்துவாகிய உங்கள் திருச்சபையை நேசிப்பதை காட்டிலும் உங்கள் வீட்டிலே இருந்து, நான்கு அல்லது ஐந்து முறை திருமணம் செய்த ஒரு ஸ்திரீயின் நெறிகேடான செயல்களை, “வீ லவ் சூசி”, என்ற நிகழ்ச்சி அல்லது ஒருபுருஷனை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதையே நேசிக்கிறீர்கள். இப்படியாக, தேவன் மேல் இருக்கிற அன்பை காட்டிலும் உலகத்தின் மேல் உங்களுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் அதிகமாய் இருக்கும் பட்சத்தில் நாம் எழுப்புதலைப் பெறாமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்படிப்பட்ட காரியங்களை பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஓ, நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து, நம்முடைய பெயரை புத்தகத்திலே போட்டு பிறகு உலகத்திற்குள் கடந்து சென்று உலகத்தோடு சேர்ந்து ஜீவிக்கலாம். உலகமும் அதை தான் எதிர்பார்க்கிறது. சபையும் அதை தான் எதிர்பார்க்கிறது. அவர்கள் தங்கள் அறிக்கையைதக்க வைத்துக் கொண்டு, அதுவே கிறிஸ்தவம் என்று எண்ணி தாங்கள் விரும்புகிறபடியெல்லாம் ஜீவிக்கிறார்கள். வருத்தப்பட வேண்டாம். உலக ஐக்கிய சபை சங்கத்தில் நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் செய்யப் போகிறீர்கள். நீங்கள் செய்ய விரும்புகிற எல்லாவற்றையும் செய்யும்படி உங்களுக்கு அனுமதிகொடுப்பார்கள். 19ஆனால் மணவாட்டியோ வெளியே அழைக்கப்பட்டும், பிரித்தெடுக்கப்பட்டும், வேறு பிரிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவளாய், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவளாய், ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டவளாய் இருப்பாள் என்பதை நினைவில் கொண்டிருங்கள். அவள் தன்னுடைய புருஷனுக்கு அருவருப்பான எல்லாவற்றிலிருந்தும் விலகியிருப்பாள். அவள் ஒரு கற்புள்ள கன்னிகை, வார்த்தையினாலே பரிசுத்தமானவள். வார்த்தையும் அவளும் ஒன்றாய் இருப்பார்கள். எப்படி ஒரு புருஷனும் மனைவியும் ஒன்றாய் இணைந்து இருக்கிறார்களோ அதே விதமாக தேவனுடைய உண்மையான அசலான தேவனுடைய சபை இருக்கும். அவன் கிறிஸ்துவாக மாறி வரும்போது, வேதம் கூறின எல்லா வாக்குத்தத்தத்திற்கும், ஒவ்வொன்றிற்கும் “ஆமென்” என்று சொல்லுவான். அப்பொழுது ஸ்தாபனம் என்ன சொன்னாலும் அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஒரு விசுவாசிக்குள்ளாக இருக்கும் ஆத்துமா எப்பொழுதும் “ஆமென்” என்று சொல்லும். ஏனென்றால், அவனுக்குள்ளாக இருந்து பேசுகிறது வார்த்தையே. “வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று வேதமானது சொல்லிற்று. அந்த விதமாக தான் அது நிரூபிக்கப்பட்டு அறியப்படுகிறது. கவனியுங்கள், என் சகோதரனே நான் சொல்லுகிறதை கவனியுங்கள். இந்த காரியங்களை எல்லாம் நாம் பார்க்காமல் இருப்பது ஒரு வருத்தப்பட வேண்டிய காரியம். இயேசு அவைகளை குறித்துப் பேசினார். அவரே அவர்களுக்கான வேதவாக்கியத்தின் அடையாளமாக இருந்தார். அவர்களோ அவரை இனங்கண்டு கொள்ளவில்லை. கச்சிதமாக அவரே வேதவாக்கியத்தின் அடையாளமாக இருந்தார். 'நானே அவர்“ என்றும் அவர்களிடத்தில் சொன்னார். ”வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. அவைகளே என்னைக் குறித்துச் சாட்சிக் கொடுக்கிறது. நான் என்னுடைய பிதாவினுடைய கிரியைகளை செய்யவில்லை என்றால் என்னை விசுவாசியாதேயுங்கள்“ என்றார். 20ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஸ்தாபனமும் வேதாகம பள்ளிகளை கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு கூட்ட இங்குபேட்டர் (அடைகாக்கும் கருவி) பிரசங்கிமார்களை பிறப்பிக்கிறது. நான் எப்பொழுதும் இந்த அடைகாக்கும் கருவியால் பிறந்த கோழிக் குஞ்சுகளுக்காகப் பரிதவிக்கிறேன். ஏனென்றால் அவைகளுக்கு தாயும் இல்லை. எவ்வளவு தான் அது சத்தம் போட்டாலும் அவைகளுக்கு தாயின் கவனிப்பு கிடைப்பதில்லை. அந்தவிதமாக தான் இந்த இயந்திரங்களும் குருமார்களை பிறப்பிக்கிறது. அவர்கள் சில நேரங்களில் எப்படி ஒரு பழங்குடியினர் எகிப்திய இரவை குறித்து ஒன்றும் அறியாமல் இருக்கிறார்களோ…, அல்லது முயலுக்கு பனிகாலணி போட்டுக்கொள்ள அறிந்திருக்குமோ,(A rabbit knows how to put on snow shoes) அது போலவே இவர்களும் தேவனை குறித்து கொஞ்சமும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். நமக்கு தேவை எல்லாம், அந்த வனாந்திரத்தின் பின்புறத்தில் அக்கினி ஸ்தம்பம் அவனுக்கு முன்பாக இறங்கும் வரை தேவனிடத்தில் காத்திருந்த மோசேயை போன்று அனுபவம் பெற்ற பிரசங்கிகளே தேவை. அந்த அனுபவத்தை யாராலும் அவனிடத்திலிருந்து எடுத்துப் போட முடியாது. அது அங்கே சம்பவித்தபோது அவன் அங்கே இருந்தான். அது உண்மையே. நாம் மறுபடியும் தேவனிடத்திற்கும் அவருடைய வேதாகமத்திற்கும் திரும்ப வேண்டும். 21“நீங்கள் என்னை அறிந்திருப்பீர்களானால், என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை கொண்டிருக்கிறார்கள். மெத்தோடிஸ்ட் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தைக் கொண்டிருக்கிறார்கள். பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே மற்ற யாவரும் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தையே கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதமோ “தேவனுடைய வார்த்தைக்கு தனிப்பட்ட வியாக்கியானம் தேவை இல்லை” என்று சொல்லுகிறது. அப்படியென்றால் அதற்கு வியாக்கியானம் கொடுப்பது என்ன? அவரே தன்னுடைய சொந்த வியாக்கியானத்தைச் செய்கிறார். “அங்கே வெளிச்சம் உண்டாகக் கடவது” என்று அவர் சொன்னபோது அங்கே வெளிச்சம் உண்டானது. அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று சொன்னபோது அவள் கர்பந்தரித்தாள். அதற்கும் எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் இந்த “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என்னுடைய ஆவியை ஊற்றுவேன்” என்று சொன்னார். அவ்விதமாகவே அவர் செய்தார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. இவைகளெல்லாம் நடக்காது என்று குறை கூறினவர்கள் முன்பாகவே சரியாக நடந்தேறினது. எப்படியானாலும் தேவனே அதைச் செய்தார். ஏனென்றால்அவரே தன்னுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்கிறார். அவர் “சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரன் வெளிப்படும் - இந்த கடைசி நாட்களில் நடக்கும்” என்று சொன்னார். அதே விதமாக அவர் செய்தார். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் சொன்ன வாக்குத்தத்தங்கள் யாவும் தன்னில் தானே வியாக்கியானம் செய்கிறது. “என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்த காரியங்களை, கிரியைகளை தானும் செய்வான்” என்று சொன்னார். இதற்கும் எந்த வியாக்கியானமும் தேவையில்லை. அவர் அதை அப்படியே செய்கிறார். அவ்வளவுதான். “நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள்”. திராட்சை செடிக்குள்ளாக இருக்கிற அதே ஜீவன் தான் கொடிகளிலும் இருக்கிறது. அதே கொடி தான் பெந்தெகொஸ்தே நாள் அன்றும் வந்தது. 22அன்றொரு நாளில் மனித அறிவுக்கு எட்டாத ஒரு காட்சியை பார்த்தேன். என்னுடைய அருமையான நண்பரும், சகோதரன் ஜேக் மூர் அவர்களின் நண்பருமான ஜான் ஷர்ரிட். இந்த ஊழியத்தின் முதலாவது கட்டத்திலே தேவன் அவரை ஆசீர்வதித்தார். அவருக்கு குழந்தைகள் இல்லாதிருந்தது. அவர் வீதிகளில் கான்கிரீட்களை உடைத்து ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து சென்டுகள் சம்பாதித்தார். அவர் கூட்டத்திற்கு வந்திருந்தபோது தேவன்அவரை ஆசீர்வதித்தார். அதன் பின் அவர் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார். இப்பொழுது அவர் பீனிக்ஸிலுள்ள பாதி இடத்தை தனக்கு சொந்தமாக கொண்டிருக்கிறார். மற்றும் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய இருபது லட்சம் அல்லது முப்பது லட்சம் தொகையை தேவனுக்கு கொடுக்கிறார். சமீபத்தில் ஒரு நால் அவருடைய பண்ணை ஒன்றில் நின்றுக் கொண்டிருந்தேன். அங்கே ஆயிரத்தை நூறு மெக்ஸிகன்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த முழு தோட்டமும் பருத்தி, உருளைக் கிழங்குகளை மாத்திரம் கொண்டிருந்தார். அது போன்று மாபெரும் பண்ணைகளைக் கொண்டிருந்தார். இவை அணைத்தையும் தனக்கு சொந்தமாக கொண்டிருந்தார். பதினைந்து வருடத்திற்கு முன்பாக கான்கிரீட் உடைக்கும் தொழில்மூலம் இருபத்தைந்து சென்டுகளை பெற்றவர். அவர் தேவனை நம்பினார். 23அவருடைய மரங்களில் ஒன்றை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அநேக வெவ்வேறு வகையைச் சேர்ந்த பழத்தைக் கொண்டிருந்தது. பெரிய எலுமிச்சை தோட்டங்களைக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்து 'சகோ. ஷர்ரிட் அங்கிருக்கும் அந்த மரத்தைக் குறித்து என்ன?“ என்று கேட்டேன். அதற்கு அவர், 'சகோ. பிரான்ஹாம், அது எல்லா வகையான பழத்தையும் கொண்டிருக்கிறது“என்றார். அதற்கு நான், 'நல்லது, அது எலுமிச்சைகளையும், ஆரஞ்சுகளையும், கிச்சிலி, நார்த்தங்காய், ஆரஞ்சுகளையும் கொண்டிருக்கிறதை பார்க்கிறேன். அப்படியென்றால் அது என்ன விதமான மரம்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், 'அது ஆரஞ்சு மரம்“ என்றார். அதற்கு நான், 'ஆரஞ்சு மரமா?“ மற்ற எல்லா கனிகளையும் கொண்டு இருக்கிறதா? அதற்கு அவர், 'ஆம், அவைகளெல்லாம் அதில் ஒட்டுப் போட்டு இணைக்கப்-பட்டிருக்கிறது“ என்றார். அதற்கு நான் ஓ‚ அப்படியா. இதைத் தான் ஒட்டுப் போடுகிறது (grafting) என்று அழைக்கிறீர்களோ? என்றேன். அதற்கு அவர், ஆம் சகோ.பிரான்ஹாம்“ என்றார். மற்றும் அவர் எப்படியாக வருடத்தில் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அவைகளை செய்கிறார்கள் என்றும் எப்படியாக அதினுடைய தண்டை எடுத்து ஒட்டுப் போடுகிறார்கள் என்றும் விளக்கினார். அப்படியென்றால் அடுத்த வருடத்தில் ஆரஞ்சு பழத்தை தவிர கிச்சிலிகளோ அல்லது மற்றவேறு எந்த பழமும் கொடுக்காது அல்லவா என்று சொன்னேன். அதற்கு அவர் 'இல்லை, இல்லை, இல்லை, நார்த்தைக் கிளை நார்த்தைப் பழத்தைக் கொடுக்கும். கிச்சிலிகிச்சிலி பழத்தைக் கொடுக்கும். எலுமிச்சை, எலுமிச்சைப் பழத்தைக் கொடுக்கும்“என்றார். நல்லது, அப்படியென்றால் அது எந்த விதமான மரம்?என்று கேட்டேன். அதற்கு அவர், 'அது ஆரஞ்சு மரம்“ என்றார். ஆனால் இந்த ஆரஞ்சு மரம் வளர்ந்து கொடிகள் கொடுக்கும் பட்சத்தில் இந்த கிளைகள்என்ன பழத்தைக் கொடுக்கும்? என்றேன். அதற்கு அவர் 'ஆரஞ்சு பழம்“ என்றார். அதற்கு நான், 'ஓ ஆம் அதை என்னால் காணமுடிகிறது“.அது சரி தான். ஏன் தெரியுமா? ஏனென்றால் அவைகள் எல்லாம் புளிப்புப் பழ (சிட்ரஸ்) வகையை சேர்ந்த பழங்கள். 24நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம் என்று உரிமை கோருகிறோம். ஆனால் நாம் ஸ்தாபன கோட்பாடுகளோடு அவருக்குள்ளாக வரும்போது நாம் அதன்படியாகவே ஜீவிக்கிறோம். அது சரிதான். ஆனால் அந்த மரம் இன்னொரு கொடியை பிறப்பிக்குமானால் அது மீண்டுமாக எழுதப்பட்ட ஒரு அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமாகவே இருக்கும். அது முதலாவது வந்தஅந்த கொடியை போலவே இருக்கும். அது பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியாய் இருக்கும். அதிலே எந்த கோட்பாடும் இருக்காது. அது வார்த்தையாக இருக்கும். 'மணவாட்டியின் மரம்“ என்று நான் பிரசங்கித்த செய்தியின் ஒலி நாடாவை அனேகர் பெற்றிருப்பீர்கள். சாயங்கால வெளிச்சங்கள் அந்த கனியை பழுக்க வைக்கும்படி அந்த கனி மரத்தின் உச்சியில் சரியாக வந்திருக்கிறது. இப்பொழுது சரியாக இந்த நேரத்தில் சாயங்கால வெளிச்சம் கனியை பழுக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 25இப்பொழுது, அவர்கள் அவரை அறிந்திருக்க வேண்டும் என்று நாம் காண்கிறோம். ஆனால் அவர்களோ அவரை அறியாமல் இருந்தார்கள். அதே விதமாக தான் நம்முடைய நாளிலும் அவரை அறியாமல் இருக்கிறார்கள். இயேசுவானவர், இந்தக் காரியத்தை சுட்டிக் காட்டினார். இப்பொழுது துரிதமாக இதை முடித்து நாம் செய்திக்குள் செல்வோம். இயேசு முன்பு நடந்தேறிய காரியங்களைக் குறித்து பேசினார். அவர் அடையாளங்களை செய்து கொண்டு, மேசியா நிறைவேற்ற வேண்டிய அடையாளங்களை கச்சிதமாக செய்துதான்தான் மேசியா என்று அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தார். ஓ‚நேற்று இரவிலே இதைப் பார்த்தோம்.அனேகர் அதை விசுவாசித்தனர். கிணற்றண்டை இருந்த ஸ்திரீ, படிப்பறிவில்லாதவளும், ஒழுக்கமும் இல்லாதவளுமாக இருந்ததைப் பார்க்கிறோம். அவள் அந்த அடையாளத்தை பார்த்த மாத்திரத்தில் “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மற்றும் மேசியா வரும்போது இவைகள் எல்லாம் செய்வார் என்று அறிந்திருக்கிறேன்” என்று சொன்னாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவள் சிகார் பட்டிணத்துக்கு ஓடி, “நான் செய்தவைகளை எனக்கு வெளிப்படுத்தின மனிதரை வந்து பாரும். இவர் அந்த மேசியா அல்லவோ?” என்று அவர்களிடத்தில் அவர் செய்தவைகள் எல்லாம் சொன்னாள். இந்த நடத்தைகெட்ட ஸ்திரீயின் சாட்சியின் மூலமாக அவர்கள் அவரை விசுவாசித்தார்கள். இதை தவிர வேறு எந்த காரியமும் சமாரியர்களுக்கு அவர் செய்ததாக வேதம் குறிப்பிடவில்லை. நாமோ யோனாவின் நாட்களில் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்களை குற்றஞ்சுமத்துவோம் என்று சொல்லுகிறோம். 26கவனியுங்கள், நாத்தான்வேல், பேதுரு இன்னும் மற்றவர்களும் விசுவாசித்ததைக் காண்கிறோம். குருடனான பர்தலேமியையும் காண்கிறோம். ஒரு மரத்தில் மறைந்திருக்கும் குள்ள சகேயுவை காண்கிறோம். நான் மேலே இருப்பதால் அவர் “(இயேசு,) என்னை ஒரு போதும் பார்க்க முடியாது என்று சொல்லிக் கொண்டான்”. ஆனால், இயேசுவோ சரியாக வந்து அந்த மரத்தின் கீழ் நின்று மேலே பார்த்து “சகேயுவே, கீழே இறங்கி வா” என்றார். அவரே வார்த்தையாய் இருக்கிறார். அந்த வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாய் இருக்கிறது. அந்த நாட்களில் இருந்த பரிசேயர்களும் கல்விமான்களும் அதை கடிந்து கொண்டார்கள். ஏனென்றால் அதற்கு ஒரு மத சம்பந்தமானமெருகும், கவர்ச்சியும் இல்லாதிருந்தது. அதில் இருக்க வேண்டிய கல்வி தரம் இருக்கவில்லை. அது ஒரு பிரசங்கி கொண்டிருக்க வேண்டிய அளவிற்கு அலங்காரப்படுத்துகிற பேச்சும், கழுத்து மற்றும் தலையை மறைக்கும் அளவிற்கு அங்கியை அணிந்தும், கழுத்துப் பட்டையை (collar) தூக்கி விட்டு சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடாத அளவிற்கு வார்த்தைகளை பேசுகிறபடி எல்லாம் இல்லை. வேதமோ “சாதாரண மக்கள் அவரை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறுகிறது. அவர் சாதாரண பாஷையை பேசினார். ஒரு சாதாரணமான மனிதனுடைய ஜீவியத்தை ஜீவித்தார். 27இப்படியாக காரியங்கள் இருக்கும் பட்சத்தில் அங்கே என்ன நடந்தது என்று பார்க்கிறோம். அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. “இந்த மனிதன் பெயல்செபுல் அசுத்த ஆவி உடையவன்?” என்று கூறினார்கள். இன்னொரு விதத்தில் சொல்லுவோமானால், “இவர் உள்ளத்தின் எண்ணங்களோடு தொடர்பு கொள்ளுகிறவர் அல்லது குறி சொல்பவர்” என்று கூறுவதாகும். அந்த காரியம் பிசாசினால் உண்டானது என்றும் இது பாவனை செய்கிறது என்று யாவரும் அறிந்திருக்கிறோம். ஆகவே அவர்கள் அவரை கடிந்துக் கொண்டதை பார்க்கிறோம். பிறகு “போதகரே எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்” என்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர் அவர்களிடத்தில் திரும்பி என்ன கூறினார்? “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளங்களை தேடுகிறார்கள்”, இப்பொழுது கவனியுங்கள். “பொல்லாத விபசார சந்ததியார்” அந்த 'பொல்லாத விபசார சந்ததியார் அதை பெற்றிருப்பார்கள்“ என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். இப்பொழுது நாம் ஜீவிக்கிறதான இந்த சந்ததி, அப்படியில்லையென்றால் வேறெது என்று எனக்கு தெரியவில்லை. நினைவில் கொள்ளுங்கள், எல்லா தீர்க்கதரிசனங்களும் கூட்டு அர்த்தங்களை கொண்டிருக்கிறது. 28மத்தேயு 3-ம் அதிகாரத்தில் “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வெளியே அழைத்தேன்”என்று சொல்லப்பட்டதை எடுத்து பாருங்கள். வேதத்தை ஆராய்ந்து பார்ப்பீர்களானால் அவருடைய குமாரனாகிய யாக்கோபை குறித்து அவர் பேசினதாக இருக்கும். ஆனால் அவருடைய மகத்தான குமாரனாகிய இயேசு எகிப்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார் என்பதையும் காட்டுகிறது. இப்பொழுது “பொல்லாததும், விபச்சாரமுமான சந்ததி அடையாளத்தை தேடுகிறது. அவர்கள் அதை பெறுவார்கள் என்று பார்க்கிறோம். அந்த பொல்லாததும் விபச்சாரமுமான சந்ததியார் உயிர்த்தெழுதலின் அடையாளத்தை காணும். யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். பிறகு உயிரோடு எழுவார், என்பதையும் பார்க்கிறோம். இப்பொழுது இது இரண்டாயிரம் வருடம் கடந்து நாம் இன்னொரு பொல்லாத விபச்சார சந்ததியாரைப் பெற்றிருக்கிறோம். ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கழித்து, நம்மத்தியில் ஜீவிக்கின்ற உயிர்தெழுந்த கிறிஸ்துவின் அடையாளத்தை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்‚ அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார். 29யோனா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் என்று நாம் அறிந்திருக்கிறோம். அனேகர் அவனை வழி தவறிப்போனவன் என்று சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் அவன் வழிதவறிப் போகவில்லை. நீதிமான்களின் அடிசுவடுகள் கர்த்தரால் கட்டளையிடப்பட்டிருக்கிறது. சமீப நாட்களில் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் நினிவேவுக்கு போவதற்கு பதிலாக தார்ஷிசுக்கு போனான் (அல்லது) செல்லப் புறப்பட்டான். அது தேவனுடைய திட்டத்தில் இருந்தது. நீதிமான்களின் அடிசுவடுகள். சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு நேரிடும் அல்லது ஏதோ காரியம் நடக்கும். யோபின் காரியத்திலும் அப்படித்தான் இருந்தது. அவனுடைய நாட்களில், பூமியில் இருந்தவர்களில் அவனே மிக சிறந்தவனாய் இருந்தான். மற்றும் தேவனுடைய பார்வையில் சிறந்தவனாக இருந்தான். ஆனாலும் அவனுக்கு என்ன நேரிட்டது என்று பாருங்கள். அவனை அவர் சிட்சிக்கவில்லை. அவனை சோதித்தார். எவ்வித கஷ்டமான சூழ்நிலையிலும் நம்பக்கூடிய ஒருவனை நான் பெற்றிருக்கிறேன் என்று பிசாசுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தார். அதே விதமாகத் தான் யோனா காரியத்திலும் நடந்தது. அவன் நினிவே போகப் புறப்பட்டான். ஆனால் தார்ஷிஷ் போகிற கப்பலில் ஏறினான். கடல் கொந்தளித்தது. அவனோ நித்திரையாய் இருந்தான். அவன் எழும்பி “என்னுடைய கையையும் காலையும் கட்டிக் கடலிலே தூக்கிப் போடுங்கள். நானே இந்த கொந்தளிப்புக்குக் காரணம்” என்று சொன்னான். அவனை தூக்கிப் போட்டபோது, அங்கே தண்ணீரில் நீந்திக் கொண்டு இரைதேடிக் கொண்டிருந்த ஒரு பெரிய திமிங்கலம் அந்த தீர்க்கதரிசியை விழுங்கினது. 30சமீப நாட்களில், இந்தியானா நதி அருகே இருக்கும் லூயிவில் கென்டக்கியில் நான் வாழ்ந்து வந்த போது நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அங்கே மேற்கூரை இல்லாமல் இருக்கும் சரக்கு ரயில் வண்டியின் மேல் ஒரு திமிங்கலத்தை வைத்திருந்தார்கள். அங்கே தன் புத்திக் கூர்மையைக் கட்டுக்குள் வைக்க இயலாத ஒரு ரிக்கி (ricky), “இப்பொழுது யோனாவை விழுங்கின அந்த திமிங்கலத்தின் கட்டுக்கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்” என்று சொல்லி அவன் கொண்டிருந்த ஒரு தளக்கட்டு பந்தை(baseball) எடுத்து அந்த திமிங்கலத்தின் தொண்டைக்குள் (உணவு குழாய்க்குள்) நுழைத்து 'இங்கே பாருங்கள்“என்று சொல்லி ஒரு பந்து கூட உள்ளே நுழைவது கடினமாய் இருக்கிறது என்று சொன்னான். ”யோனாவை திமிங்கலம் விழுங்கினது என்றால் அது வெறும் ஒரு பழைய கட்டுக்கதை. அது வெறும் கட்டுக்கதை“ என்று சொன்னான். அதை என்னால் கேட்டுக்கொண்டு அமைதியாய் இருக்க முடியவில்லை. “ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று அவரிடத்தில் சொன்னேன். அதற்கு அவன் ஒரு மனிதன் அதினுடைய தொண்டையில் உள்ளே நுழைவது எவ்வளவு கூடாத காரியம் என்று எனக்கு விளக்கினான். அதற்கு அவனிடத்தில் “ஐயா நீர் வேதத்தை வாசிக்க தவறினீர். அது கட்டுக் கதை அல்லஅது சத்தியம்” என்று சொன்னேன். அப்பொழுது அவன் என்னைப் பார்த்து, “நீ யார்” என்றான். அதற்கு நான், “நான் சங்கை. பிரான்ஹாம், ஆற்றுக்கு அப்புறமிருந்து வந்திருக்கிறேன்”என்றேன். அவனோ, “ஓ‚அப்படியா அவற்றையெல்லாம் விசுவாசிக்கிற ஒரு பிரசங்கியைப் பார்க்கிறேன்” என்றான். அதற்கு நான், “என் முழு இருதயத்தோடும், என் முழு இருதயத்தோடும்” என்று சொன்னேன். அதற்கு அவன், “நல்லது ஐயா, நான் தர்க்கம் பண்ணுவதற்காக சொல்லவில்லை. உம்முடைய விசுவாசத்தை பாராட்டுகிறேன். ஆனால் விஞ்ஞான பூர்வமாக ஒரு மனிதனுடைய கையைக் கூட அதின் தொண்டையில் நுழைப்பது கூடாத காரியமாயிற்றே” என்றான். அதற்கு நான், “ஐயா நீங்கள் வேதவசனத்தை சரியாக வாசிக்கவில்லை. இந்த மீன் 'ஆயத்தம் பண்ணப்பட்ட விசேஷமான மீன்' என்று வேதம் கூறுகிறது என்று சொன்னேன். அது சரியே. ஒரு மீனை ஆயத்தம் பண்ணினேன்… என்று தேவன் சொன்னார். அது விசேஷமானது”. தேவன் என்ன சொல்லுகிறாரோ அது சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். இது விசேஷமானது. அவன் அவனுடைய கண்ணாடியை மேலும் கீழும் இரண்டு அல்லது மூன்று முறை இறக்கி அவனுடைய போதனையில் தொடர்ந்து சென்றான். அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். அது விசேஷமான ஒரு மீன். யோனாவை விழுங்கும்படி தேவன் ஒரு விசேஷித்த மீனை ஆயத்தம்பண்ணினார். ஓ‚ அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அங்கே அந்த மீன் அவனை விழுங்கினது என்று பார்க்கிறோம். 31இப்பொழுது ஒரு மீன் ஏதாவதொன்றை சாப்பிடும் என்றால் அது சாப்பிட்ட பின் உடனே தண்ணீரின் அடிபாகத்திற்குச் சென்றுவிடும். உங்கள் அலங்கார மீனுக்கு (gold fish) இரையை போட்டு அது என்ன செய்கிறது என்று கவனித்து பாருங்கள். அந்த சிறிய மீன்கள் யாவும் அந்த தொட்டியின் கீழ் பாகத்திற்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அவைகளுடைய வயிறு நிரம்பி இருப்பதினால் அவைகள் சற்று ஓய்வு எடுக்கும்படி செல்லும். ஆகவே அந்த பெரிய மீன் யோனாவை விழுங்கினபோது அது அலைகளிலிருந்தும் காற்றிலிருந்தும் சற்று ஓய்ந்திருக்கும்படி தண்ணீரின் அடிபாகத்திற்கு சென்றிருக்ககூடும். கடலின் மேல் காற்று எத்திசையும் வீசிக் கொண்டு ஒரு பெரிய எழுப்புதல் நடந்து கொண்டிருக்கிறதைக் கண்டு அந்த மீன் அந்த எழுப்புதலில் தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அது இந்த பிரசங்கியாரை கண்டு பிடித்து அவனை விழுங்கி தண்ணீரின் அடிபாகத்திற்கு சென்றுவிட்டது. 32இப்பொழுது யோனா மீன் வயிற்றுக்குள் தன்னுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டவனாய் வாந்தி நிறைந்த மீனின் வயிற்றில்கிடந்தான். இப்பொழுது மக்கள் இப்படிச் சொல்வதை கேட்டிருக்கிறேன். “நேற்று இரவு நான் ஜெபிக்கப்பட்டேன், ஆனால் என்னுடைய கையில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் முடங்கி இருக்கிறது. இன்னுமாக வயிற்று வலி இருக்கிறது. என்னுடைய கண்களில் எந்த மாற்றமும் இல்லை”. ஓ என்னே‚ அப்படியிருக்க நீங்கள் யோனாவைக் குறித்து சத்தமாக பேசுகிறீர்கள்?. அவனுக்கு இருந்த அறிகுறிகளை போன்று யாருக்காவது அறிகுறி இருக்குமானால். . . எந்த பக்கம் பார்த்தாலும் மீன் வயிறாக இருந்தது. இந்த பக்கம் பார்த்தாலும் மீன் வயிறு. அந்த பக்கம் பார்த்தாலும் மீன் வயிறு. மற்றும் அவனுடைய கைகள் அவனுக்கு பின்னாக கட்டப்பட்டிருந்தது. அவன் கடலின் அடிபாகத்தில் ஏறக்குறைய இருநூற்றுநாற்பது அடி ஆழத்தில் அந்த மீனின் வயிற்றில் இருந்தான். இப்பொழுது அறிகுறிகளைக் குறித்துப் பேசி அவனைப் பின்மாற்றம் அடைந்தவன் என்றும் சொல்லுகிறீர்கள். ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? இவைகள் எல்லாம் பொய்யான மாயை இவைகளைப் பார்க்க மாட்டேன். ஆனால் ஆண்டவரே, ஒரே ஒருவிசை உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நான் நோக்கிப் பார்க்கட்டும். 33இப்பொழுது சாலெமோன் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தபோது, “கர்த்தாவே, உம்முடைய மக்கள் எங்காவது தொல்லையினால் அவதிப்பட்டு, இந்த பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி பார்ப்பார்களானால், அப்போது பரத்திலிருந்து அவர்களுக்கு செவிகொடும்” என்று அவன் செய்த ஜெபத்தை யோனா அறிந்திருந்தான். ஆகவே அவன் ஜெபத்தை ஏறெடுத்தான். ஒரு பின்வாங்கி போன மனிதனின் ஜெபத்தில் அவ்வளவு திடநம்பிக்கை உடையவனாக இருப்பானானால் நாம் எவ்வளவாக இருக்க வேண்டும். இன்றிரவு அவ்விதமான நிலையில் நாம் யாரும் இல்லை. அவ்விதமான அறிகுறிகளை உடையவர்களாய் நாம் யாரும் இல்லை. இருந்தாலும் நாம் நம்முடைய அறிகுறிகளையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? ஒரு பின்வாங்கிப் போனவனுடைய ஜெபத்திலே அப்பேற்பட்ட திடநம்பிக்கை இருக்கும் என்றால்...... நாமோ பரத்தில் கைகளால் கட்டப்படாத ஆலயமாகிய உன்னதமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிற இயேசுவை நோக்கிப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் தாமே அங்கு உங்களுடைய அறிக்கையின்படியாக உங்களுக்காக பரிந்து பேசும்படி எதிர் பார்க்கப்படுகிறார். அப்படியென்றால் “ஆண்டவரே இந்த அறிகுறிகளை மறுதலித்து இன்னும் ஒரு விசை கூடஉம்முடைய வாக்குத்தத்தத்தை நோக்கி பார்க்கட்டும்” ஓ, என்ன‚நாம் மாத்திரம் தேவனை காட்சியில் காணுவோம் என்றால்‚ 34இப்பொழுது அந்த மீன் யோனாவை, அவன் போகும் பாதையிலிருந்து பின் வாங்கி மூன்று நாள் இரவு பகலுமாக அவனை சுற்றி எடுத்து வேறு பாதையில் கொண்டு சென்றது என்று பார்க்கிறோம். அப்பொழுது நினிவே மக்கள் இன்றைக்கு இருக்கிற உலக மக்களைப் போன்று இருந்து வந்தனர். அவர்கள் வியாபார உலகில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டிருந்தனர். எல்லா புருஷர்களும் மீன் பிடித்தார்கள். அவர்கள் விக்கிரக ஆராதனை செய்தவர்கள். அவர்களுக்கு திமிங்கலம் கடல் கடவுளாக இருந்தது. ஒரு நாள், கிட்டதட்ட பதினோரு மணி அளவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களுடைய கடல்-கடவுள் வந்து அதினுடைய நாவை வெளியே நீட்டினது. அப்போது அந்த தீர்க்கதரிசி இறங்கு பலகையின் மேலாக வருவது போல் அந்த நாக்கின் மேல் நடந்து வந்தார். அவர்கள் மனந்திரும்பினதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பார்த்தீர்களா? அது தான் அந்தஅடையாளம் அங்கே ஒரு அடையாளம் இருந்தது.. அப்படியென்றால் அதினுடைய சத்தம் என்ன? சத்தம் என்ன? “பையன்களே என்னுடைய வல்லமையை பார்த்தீர்களா? இல்லை. ”மனந்திரும்புங்கள், இல்லையென்றால் தேவன் நாற்பது நாட்களுக்குள்ளாக இந்த இடத்தை அழித்துவிடுவார்“ என்பதுதான். அடையாளமும் அதினுடைய சத்தமும், ”மனந்திரும்பு“ என்பது அந்த அடையாளத்தை பின்தொடர்ந்த சத்தமாக இருக்கிறது. 35இயேசு இவ்விதமாக 'யோனாவின் பிரசங்கத்தை கேட்டு வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்“ என்று சொன்னார். பாருங்கள். அதன் பிறகு “தென்தேசத்து ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடேழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள். ஏனென்றால் அவள் பூமியின் எல்லைகளிலிருந்து சாலெமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலெமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது முடிப்பதற்கு முன்பாக இதை சொல்ல விரும்புகிறேன். தேவன் ஒரு வரத்தை இந்த பூமிக்கு அனுப்பும் போது, அதாவது ஒரு அடையாள வரத்தை அனுப்பும் போது, மக்கள் அதை விசுவாசிப்பார்கள் என்றால் அதுவே மக்கள் வாழ்ந்த காலத்திலேயே மகத்தான மகிமையுள்ள காலமாய் இருக்கும். ஆனால் அவர் ஒரு அடையாளத்தை அனுப்பி அது புறக்கணிக்கப்படும் என்றால் அந்த சந்ததி பெரும் குழப்பத்திற்குள்ளாகும். அது எப்பொழுதும் அந்த விதமாகத்தான் இருக்கிறது. இன்றிரவு, இந்த கடைசி நாட்களில் அமெரிக்க மக்கள் மட்டும் தேவனுடைய அடையாளத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றால் எப்படி இருக்கும்? 36நாமோ ஃபோர்ட் நாக்ஸ்க்கு சென்று பூமியை ஆழமாகத் தோண்டி நம்முடைய அரசாங்கத்தை அங்கு அமைத்து விடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், ருஸ்ஷியா அறு நூறு அடி பூமிக்கு கீழ் சென்று நூற்று ஐம்பது மைல்கள் தூரம் வெடிக்கச் செய்து எரிமலை குழம்பை பீறிடச்செய்யும் அளவிற்குக் அணுகுண்டுகளை வைத்திருக்கிறார்கள். இந்த பூமியிலே நீங்கள் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உண்டு. அது இயேசு கிறிஸ்துவின் கரத்தில் மட்டுமே உண்டு. அவரே நமக்கு தஞ்சம். ஆனால் இன்றிரவு,தேவனால் கொடுக்கப்பட்ட வரமாகிய பரிசுத்த ஆவியை அமெரிக்கர்களாகிய நாம் அனைவரும் அதின்மேல் நம்பிக்கை வைத்திருப்போம் என்றால் எப்படி இருக்கும்? ஏன், சாலமோனின் நாட்களில் இருந்தது போல, ஒவ்வொரு தேசமும் நம்மை கண்டு பயப்படும். தேவன் சாலமோனுக்கு ஒரு வரத்தை கொடுத்தார். முழு சபையும் எல்லோருமாக அதை விசுவாசித்தார்கள். அது யூதர்களுக்கு ஆயிரம் வருட மகிழ்ச்சியின் நாட்களாக இருந்தது. அது வரப்போகிற ஆயிரம் வருட அரசாட்சியின் நாட்களுக்கு நிழலாய் பழைய ஏற்பாட்டில் சாலமோன் நாட்கள் இருந்தது. அது யூதர்களின் பொற்காலம். கவனியுங்கள், யாரும் அவர்களோடு யுத்தம் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டிருந்ததினால் அவர்களுடைய தேவன் உண்மையான தேவன் என்று அறிந்து பயந்தார்கள். மற்றும் மக்கள் யாவரும் ஏக மனதாய் ஒருமனப்பாட்டில் இருந்தார்கள். அவர்களுடைய புகழ் எல்லா இடத்திற்கும் சென்றது. எங்கு பார்த்தாலும், “ஓ, இஸ்ரவேலர்கள் எப்பேற்பட்ட மகத்தான தேவனை பெற்றிருக்கிறார்கள்,அவர் ஜீவிக்கின்ற தேவன்‚” என்று சொல்ல கேட்பீர்கள். 37மேலும் அவருடைய புகழ் ஷீபா வரை சென்றது. அது எவ்வளவு தூரம் என்று உலக வரைபடத்தை (map) எடுத்து பாருங்கள். அங்கே தேவனுக்காக தன்னுடைய உள்ளத்தில் ஏங்கி தவித்த ஒரு சிறிய ராஜ ஸ்திரீ இருந்தாள். எப்போதெல்லாம் நாடோடிகளின் சரக்கு வண்டி வருகிறது என்று கேள்விப்படுகிறாளோ அப்போது எல்லாம் அவர்களிடம், “நீங்கள் பாலஸ்தீன வழியாய் கடந்து வந்தீர்களா?” என்று கேட்பாள். “ஆம்” “அப்படியானால் அங்கே நடந்து கொண்டிருக்கிற அந்த மகத்தான எழுப்புதலை குறித்துச் சொல்லும்” என்பாள். “ஓ, அது ஆச்சரியமானது” என்று எல்லோரும் சொல்லுவார்கள். “நீ பார்த்தாயா?” “ஆம்” “எப்படி இருந்தது?” “ஓ, அவர்கள் சேவித்து வந்த அவர்களுடைய மகத்தான தேவன் இறங்கி வந்து அவர்களுடைய ஊழியக்காரர் ஒருவரில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் அவரை ராஜாவாக ஆக்கினார்கள். அவரால் வகையறுக்க முடிகிறது. அவர் சரியாக உங்கள் இருதயத்தில் இருக்கும் எண்ணங்களை அறிந்திருக்கிறார். மற்றும் அவர்கள், தேவன் வார்த்தையாய் இருக்கிறார், வார்த்தை தேவனாய் இருக்கிறது, வார்த்தை இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறது என்று சொல்லுகிறார்கள். இதுவரை கேட்டவைகளிலே இந்த மனிதனுடைய ஞானம் எல்லாவற்றையும் மிஞ்சினதாய் இருக்கிறது. அவர் உன்னுடைய சிந்தனை என்னவென்று உன்னுடைய இருதயத்தை வகையறுத்து சொல்ல முடியும். ஓ, அவர்கள் ஆச்சரியமான எழுப்புதலை கொண்டிருக்கிறார்கள்” என்பார்கள். 38உங்களுக்கு தெரியும், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். அது தேவனுடைய வாக்குத்தத்தம். இந்த சிறிய ராஜ ஸ்திரீ மிகவும் ஏங்கினவளாய் அந்த எழுப்புதலுக்கு போகும் படி விரும்பினாள். மற்றும் அவளை போகவிடாமல் தடுப்பதற்கு, அனேக தடைகள் இருந்தது. முதலாவது அவள் அந்நிய தேவர்களை சேவிக்கிறவளாய் இருந்தாள். அவள் தன்னுடைய ஆசாரியனிடத்தில் சென்று நான் போகலாமா என்று கேட்க வேண்டும். அவள் ஒரு ராணியாய் இருந்தாள், மற்றும் பிரசித்தி பெற்றவள். அவளுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. அவள் அந்த ஆசாரியனிடத்தில் சென்று, “மகத்தான பரிசுத்த தந்தையே, இஸ்ரவேலில் ஒரு எழுப்புதல் நடக்கிறதை நான் அறிந்திருக்கிறேன். மற்றும் அவர்கள் மகத்தான நேரத்தை கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தேவன் ஜீவிக்கிறவராய், நாம் இதுவரை கேள்விப்பட்டிராத, கண்டிராத, மகத்தான அற்புத அடையாளங்களை செய்துக் கொண்டிருக்கிறார். நான் நாடோடிகளை விசாரித்தபோது அவர்கள் எல்லோரும் அது ஆச்சரியமானது என்றனர். ஆகவே நானும் அங்கு சென்று அதை காணும்படி என்னுடைய ஸ்தாபனத்திலிருந்து என்னை விடுவிப்பீர்களா? என்று அவள் கேட்டு இருப்பாள். அதற்கு அவர்,“அவ்விதமான கூட்டத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. ஆகவே நீ அதிலிருந்து விலகி இருப்பது உனக்கு நல்லது” என்று சொன்னதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பார்த்தீர்களா? மனிதன் மரிக்கிறான். ஆனால் ஆவிகள் மரிப்பதில்லை. பாருங்கள். ஆகவே, “இல்லை, அதை நாம் ஆதரிப்பதில்லை, நீ அதிலிருந்து விலகி இருப்பது உனக்கு நல்லது” என்று சொன்னதைப் பார்க்கிறோம். 'நல்லது பரிசுத்த தந்தையே, நீர் சொல்வது எனக்கு புரிகிறது. ஆனால் இங்கே.....“ 'ஓ, இங்கே கவனி‚ அப்படி ஏதாவது நடக்கும் என்றால், நம் மத்தியில் தான் நடக்கும். நம்முடைய சபை தான் அதை பெற்றிருக்கும்“. ஓ என்ன‚ ”அது இங்கு தான் நடக்கும். சரியாக நம்முடைய சபையில் தான் நடக்கும்“. 39அப்பொழுது அந்த சிறிய ராஜஸ்திரீ எழுந்து அவரிடம் பேசினதை என்னால் கேட்க முடிகிறது. அவளுடைய தைரியத்தை மிகவும் நேசிக்கிறேன். அவள் எழுந்து இப்படியாக சொன்னாள். “அநேக வருடங்களாக இந்த சிலைகள் இங்கே நின்றவாறு இருக்கிறதை நான் காண்கிறேன். மற்றும் நீர் அந்த பீடத்தின் பின் நின்று, ”கடவுள் ஒருவர் இருந்தார் - கடவுள் ஒருவர் இருந்தார்…என்று பிரசங்கித்ததை கேட்டிருக்கிறேன். மற்றும் என்னுடைய தாய்க்கு தாயும் அவருடைய தாயும் அதே கதையைஜதான் கேட்டார்கள். ஆனால் இதுவரை எந்த அசைவையும் இங்கு நான் கண்டதில்லை. ஆனால் அவர்களோ ஒரு அசலான, ஜீவிக்கிற தேவனை அவர்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆகவே நான் அதை காண விரும்புகிறேன் என்றாள்.“ “இங்கே கவனி‚ நீ அங்கே போவாய் என்றால், சிவந்த சமுத்திரம் திறந்தது மற்றும் அது போன்று காரியங்களை குறித்து பேசுகிற கூட்டத்தாரோடு கூட உன்னை சம்பந்தப்படுத்திக் கொள்வாய். ஆகவே நீ அங்கே போகாமல் இருப்பது உனக்கு நல்லது. நீ அங்கே போவாய் என்றால்......” “என்னவாக இருந்தாலும் பரவாயில்லை,நான் போகிறேன்” “அப்படியென்றால் நாங்கள் உன்னுடைய பெயரை அந்த புஸ்தகத்திலிருந்து எடுத்து போட வேண்டியதாய் இருக்கிறது” என்றான். “நல்லது, என் பெயரை எடுத்துவிடு.” ஒரு நபர் தேவனுக்காக பசி தாகத்துடன் இருப்பானானால் அவனை எந்த புஸ்தகமும் பிடித்து வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒரு மகத்தான புஸ்தகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். “நீர் விரும்பினால் என்னுடைய பெயரை எடுத்து விடும், நான் போகிறேன். அவர்களுடைய தேவன் ஜீவிக்கிறார் என்று நான் கேள்விப்பட்டேன். அதில் நிஜத்தன்மை உண்டு. ஆகவே நீ என்னுடைய பெயரை அதிலிருந்து எடுத்துவிடுவது நல்லது.” 40இப்பொழுது, அவளை தடை பண்ணும்படியாக அநேக காரியம் அவளுக்கு இருந்தது. இப்பொரழுது இதை நினைவில் கொள்ளுங்கள். அவள் போகும்படி தன்னுடைய சிந்தையிலே தீர்மானித்திருந்தாள். அவள் யேகோவா யார் என்பதை அறியும்படியாய் எல்லா சுருள்களையும் அவள் எடுத்துக் கொண்டாள். அது சாமர்த்தியமான ஸ்திரீயாகும். மற்றவருடைய ஊகத்தை கொண்டு போக முயற்சிக்காதீர்கள். வேதம் அவரைக் குறித்து என்ன சொல்லுகிறதோ அதன் அடிப்படையில் செல்லுங்கள். தான் யாரென்று அவர் சொல்லுகிறாரோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் ஜீவிக்கிறாரா இல்லையா என்று அவரை ஆராய்ந்து பாருங்கள். அவர் யாரென்று பாண்டித்தியம் பெற்றவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதை அல்ல. ஆனால் அவர், தன்னைக் குறித்து என்ன சொல்லுகிறாரோ, என்ன வாக்குத்தத்தம் கொடுத்தாரோ அதையே ஆராய்ந்து பாருங்கள். அவள் அந்தப்படியாக வாசிக்கத்து வங்கினாள். பிறகு அவள் ஒரு அருமையான யோசனையை கொண்டிருந்தாள்,அதாவது “நான் அநேக பரிசுகளை கொண்டு சொல்லப் போகிறேன். அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் நான் அதை ஆதரிப்பேன், அது உண்மையல்லாதபட்சத்தில், என்னுடைய பணத்தை திரும்ப கொண்டு வருவேன்” என்று சொல்லிக் கொண்டாள். அவள் பெந்தெகொஸ்தே மக்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்க முடியும். அதாவது நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களோ அதை பரிகாசம் செய்கிற வானொலி நிகழ்ச்சிகளை ஆதரிக்கிறீர்கள். நல்லது நான் அதைக் குறித்து அமைதியாயிருக்கட்டும். எப்படியாயினும், நீங்கள் அதை குறித்து போதுமான அளவு அறிந்து இருக்கிறீர்கள். அந்தக் காரியத்தைக் குறித்து உங்கள் பிரசங்கிமார்கள் பேசட்டும். கவனியுங்கள். அது ஒரு வெட்கக்கேடு. 41அவளோ “அது உண்மையாய் இல்லாத பட்சத்தில் நான் என்னுடைய பரிசுகளை திரும்பவும் கொண்டு வந்து விடுவேன்” என்றாள். ஆகவே அவள் ஒரு ஒட்டகத்தின் மேல் அவற்றையெல்லாம் கட்டிக் கொண்டாள். அவளுக்கு தடையாய் இருந்தவைகளை நினைவில் கொள்ளுங்கள். அவள் வெகுதூரம் பிரயாணம் செய்ய வேண்டியதாய் இருந்தது. அவள் எப்படி போக வேண்டியதாய் இருந்தது தெரியுமா? ஒட்டகத்தின் மேல் செல்ல வேண்டிய அளவிற்கு தூரமாய் இருந்தது. எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது தெரியுமா? தொன்றூறு நாட்கள் பிடிக்கும். மூன்று மாதங்கள் ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்து செல்ல வேண்டும். குளிர்சாதன கெடிலாக் காரில் (Cadillac) செல்லவில்லை. இல்லை. இல்லை. மூன்று மாதங்கள் ஒட்டகத்தின் மேல் சென்றாள். “நியாயத்தீர்ப்பு நாளிலே அவள் இந்த சந்ததியாரோடே எழுந்து நியாயந்தீர்ப்பாள்” என்று அவளைக் குறித்து இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அதே காரியம் நடக்கிறதை காண பிரிமிங்ஹாமில் உள்ள மக்கள் ஒரு தெருவையும் கூட கடந்து வராமல் இருக்கிறார்கள். பஸ்களும், கார்களும், விமானங்களும் எல்லாமும் நம் நாட்களில்இருக்கிறதே‚ அவர்கள் எழும்பும்போது இந்த சந்ததியாரை நியாயம் தீர்ப்பார்கள் என்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆம் ஐயா. பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கு இருக்கிறார். அவர் சாலமோனிலும் பெரியவர் கவனியுங்கள். அதன் பிறகு.... வேறொரு எண்ணம் இருக்கிறது. கவனியுங்கள் 42இஸ்மவேல் பிள்ளைகள் வனாந்திரத்திலே இருந்தார்கள். அவர்கள் கும்பல் கொள்ளையர்களாய், திருடர்களாய் இருந்தார்கள். அவளோ எல்லா பணத்தையும் அவளுடன் வைத்திருந்தாள். அவர்கள் அவளுடைய அரவானிகள் குழுவையும், அவளுடைய பாதுகாவலர்களையும், அவளுடைய வேலைக்காரிகளையும் அடித்துவெட்டிப் போட்டு அவளுடைய பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு அங்கே ஒன்றும் நடக்காதது போல் கடந்து செல்ல முடியும். ஆனால் அதில் ஒரு காரியம் இருக்கிறதென்று நீங்கள் அறியீர்களா? தேவனுடைய உண்மைத் தத்துவத்தை அறிந்து கொள்ளும்படி உங்களுடைய இருதயத்தில் பசி தாகம் உள்ளவர்களாய் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய பாதையில் எந்த ஒரு ஆபத்தும் வராது. நீங்கள் எந்த ஒரு ஆபத்தையும் பார்க்கமாட்டீர்கள். எந்த தோல்வியையும் பார்க்கமாட்டீர்கள். “நல்லது நான் சுகமாக முடியுமா?” என்ற கேள்விக்கே சிந்தையில் இடமில்லை. உண்மையான விசுவாசம் தன்னில் தானே நங்கூரமிடப்பட்டிருக்கும். அதை ஒன்றும் அசைக்க முடியாது. அது அங்கேயே இருக்கும்.அங்கே இருந்த ஆபத்தை கொஞ்சம் கூட எண்ணாதிருந்தாள். அவளோ ஒரே ஒரு நோக்கத்தை கொண்டிருந்தாள். அதையே சாதிக்கும்படி விரும்பினாள். மற்றும் அவளுடைய குறிக்கோள்கள் சரியானதாய் இருந்தபடியினால் அதை அடையும்படி அவளுடைய உள்ளத்தில் பசிதாகமுள்ளவளாய் கடந்து சென்றாள். 'நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்“. அது உண்மையே. 43இப்பொழுது அவள் வனாந்திர வழியாய் அவளுடைய பிரயாணத்தை துவங்கினபோது என்ன செய்தாள் என்று கவனியுங்கள். இரவு நேரத்தில் பிரயாணப்பட்டு, பகல் நேரத்தில் பாலைவன சோலைகளில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு வேதவாக்கியங்களை படித்துக் கொண்டிருந்தாள். கடைசியாக சாலமோனின் அரண்மனைக்கு வந்தடைந்தாள். அவள் அந்த மண்டபத்தண்டையில் வந்து சேர்ந்தபோது, அவளுடைய ஒட்டகத்தின் மேலுள்ள மூட்டைகளையெல்லாம் இறக்கி அவளுக்கென ஒரு கூடாரத்தை போட்டுக் கொண்டாள். இன்றைக்கு வருகிற சில மக்களை போன்று அவள் வரவில்லை. அவள் அப்படி வரவில்லை. இங்கே இதோ அதினுடைய 1964-ம் வருட கருத்தின் கோணம்;. 'தேவன் இவ்விதமாக காரியங்களை செய்கிறார் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே நான் அங்கு செல்லட்டும். ஆனால் நான் விசுவாசிக்கிற காரியத்திற்கு விரோதமாக பேசுகிற முதல் வார்த்தையிலேயே நான் வெளியே கடந்து போய்விடுவேன்“ என்பார்கள் பார்த்தீர்களா?. ஆனால் அவள் அப்படி இல்லை. அவள் வார்த்தையை அவளுடன் கொண்டு வந்து அங்கே அமர்ந்தாள். அவள் முழுவதுமாக உறுதிப்படுத்திக் கொள்ளுமட்டும் அங்கேயே தரித்திருக்கப் போகிறாள். அவளுடைய சொந்த யோசனைகளை ஆராய்ந்து பார்க்கப் போவதில்லை. ஆனால் வார்த்தையை ஆராய்ந்து பார்க்கப் போகிறாள். ஆகவே அவள் உள்ளே சென்றாள். முதல் நாளிலே அவள் பின்பாக உட்கார்ந்து கொண்டதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. எக்காளங்கள் ஊதப்பட்டு, மணியோசைகள் எழுப்பப்பட்ட போது எல்லா பாடகர்களும் பாடல் பாடும்படி கடந்து சென்றார்கள். அங்கே உடன்படிக்கை பெட்டியானது வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் பாஸ்டர் சாலமோன் வெளியே வந்து அங்கே அமர்ந்தார். அப்போது அவள், “இந்த மனிதனுக்குள் தேவன் இருக்கிறாரா இல்லையா என்று நான் இப்பொழுது காணட்டும்” என்றாள். ஆகவே அவள் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொன்றாக வகையறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஓ, என்னே ஒரு அருமையான காரியம்‚ மறைக்கப்பட்டது ஒன்றும் இல்லை. ஆகவே அவளும் அவளுக்கென ஒரு ஜெப அட்டையை பெற்றுக் கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். அவள் ஜெப வரிசையில் வந்தபோது...ஒவ்வொரு நாளாக கடந்து போனது அவளோ காத்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே எழுப்புதல் நடந்து கொண்டிருக்க அவளுடைய ஆர்வம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவளுடைய இருதயம் அவ்வளவாய் ஏங்கினது. அதன் பிறகு அவளே சாலமோனுக்கு முன்பாக நின்றாள்.அப்போது வேதமானது, “அவளுடைய இருதயத்தின் எண்ணங்களை எல்லாம் சாலமோன் வெளிப்படுத்தினான்” என்று கூறிற்று. அதாவது வகையறுத்தல். 44இப்பொழுது இங்கே சாலமோனின் தேவன், இயேசு நிற்கிறார். “சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார்” என்றார். பாருங்கள். அவர்களோ, “போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்” என்கிறார்கள். “சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார், மற்றும் தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்”. வேதாகமம் சரித்திரத்தின்படியாக அப்போதிலிருந்து இம்மட்டும் நாம் இரண்டாயிரம் வருடங்களை பெற்றிருக்கிறோம். இரண்டாயிரத்து எண்நூறு வருடங்கள் கடந்துவிட்டன. மேலும் இங்கு இன்றிரவு சாலமோனிலும் பெரியவர் இந்நாளுக்கென்று வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையோடு இங்கு இருக்கிறார். ஆனால் நாமோ இன்னும் மனம் தளர்ந்தவாறு இருக்கிறோம். தன் சாட்சியைக் கொண்டு, நியாத்தீர்ப்பு நாளிலே இந்த பிர்மின்ஹம், அமெரிக்க ஐக்கிய தேசத்தை, மற்றும் மீதமுள்ள தேசங்களை நியாயந்தீர்ப்பாள் என்பதில் எந்த வியப்பும் இல்லை. அவளுடைய இருதயம் தேவனைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு அது உண்மையா என்று காணுமட்டும் அங்கேயே தரித்திருந்தாள். 45அந்த அசலான சம்பவத்தை அவள் கண்டபோது என்ன சொன்னாள் தெரியுமா? என்ன சொன்னாள் தெரியுமா? சாலமோன் அவளுடைய இருதயத்தில் இருந்தவைகளை வெளிப்படுத்தினபோது “இதுவரை நான் கேட்டவைகளைக் காட்டிலும் அதிகமாய் இது இருக்கிறது” ஏனென்றால் இது அவளுக்கே நடந்தது‚ ஏதோ மற்றவர்கள் என்ன சொன்னார்களோ அதை அவள் கண்டதை மாத்திரம் அல்ல, அது அவளுக்கே நடந்தது அவளுடைய இரகசியம் அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஆனதால் “இது மகத்தானது” என்றாள். மேலும் “இக்காரியங்களை எந்நேரமும் பார்க்கிற உம்முடைய ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எப்போதும் உமக்கு முன்பாக நின்று எந்நேரமும் இந்த காரியங்களை காண்கிற உம்முடைய மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றாள். அவர் தேவனுடைய வீட்டிற்குள் செல்லுகிற வழியை அவள் கண்டாள். அவளும் ஒரு விசுவாசியானாள். 46மற்றும், சாலமோனின் நாட்களிலும், யோனாவின் நாட்களிலும், இருந்தது போல, இந்த கடைசி நாட்களிலும் எழுந்து இந்த சந்ததியாரை நியாயந்தீர்ப்பாள் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. அவள்தானே இந்நாளில் உயிர்தெழுதலில் எழுந்து, இக்காலத்தில் ஜீவிக்கிற மக்களை நியாய்ந்தீர்ப்பாள். ஏனெனில் சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தாமே இங்கு இருக்கிறார். வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் தாமே அதே விதமான வரத்தோடு தன்னுடைய ஜனத்தாரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இங்கு இருக்கிறார். சரியாக கிறிஸ்துவுக்குள் இருந்தபடியாகவே அவர் செய்து கொண்டு வருகிறார். சாலமோனில் இருந்தபடியாகவே அவர் செய்து கொண்டு வருகிறார். தீர்க்கதரிசிகளில் இருந்தபடியாகவே அவர் செய்து கொண்டுவருகிறார். கடைசி நாட்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தபடியாக நூற்றுக்கும் நூற்றுக்கும் அதிகமான வருடங்களாக நாம் அதை பெற்றிருக்கவில்லை. அவருடைய முதலாவது வருகைக்கு முன்பாக அவர்கள் நூற்றுக்கணக்கான வருடங்கள் எந்த வகையறுத்தலையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இதோ காட்சியிலே வரும்போது, ஒருவர் தோன்றி மேசியாவை அறிமுகப்படுத்தினார். மற்றும் அதை தொடர்ந்து வரப்போகிற கடைசி நாளிலும் அதே விதமாக தான் இருக்கும் என்று வாக்குத்தத்தம் கொடுத்தார். இதோ நாம் சரியாக இந்த கடைசி நாளிலே இருக்கிறோம். அவர் வாக்குத்தத்தம் பண்ணின அடையாளங்கள், உலகம் சூழ்நிலைகளெல்லாம் எப்படி இருக்கும் என்று சொல்லப்பட்டதோ, உலகத்தின் ஒழுக்ககேடுகள், மற்றும் நாம் கொண்டிருக்கிற எல்லாமே சரியாக சொன்னபடி அதினுடைய ஸ்தானத்தில் இருக்கிறது. அதே போல் பரிசுத்த ஆவியானவரும் சரியாக சொல்லப்பட்ட ஸ்தானத்திலே இருக்கிறார். ஓ, நாம் உண்மையான தேவனை சேவிக்கிறோம் என்பதை அறியும் போது அது மிகவும் அருமையாய் இருக்கிறது. 47இங்கே ஒரு காரியத்தை சொல்ல உணர்த்தப்படுகிறேன். ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் மறுபடியும் சொல்லும்படியாக உணருகிறேன். நான் வேட்டையாடுவேன் என்று எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். ஒரு மிருகத்தை வேட்டையாடுவதற்கு அல்ல. காடுகளில் இருக்க எனக்கு விருப்பமுண்டு. என்னுடைய தாய் கலப்பினத்தவர்கள் என்று நீங்கள்அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் பாதி செவ்விந்திய பெண். அவர்களுடைய தாயார் டெனென்சியில் ஊதிய தொகையை பெற்றுவந்தார்கள். பாருங்கள். ஆகவே நான் வேட்டையாடுவதை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய மனமாறுதல் அதை என்னிடத்திலிருந்து எடுத்து போடவில்லை. ஏனென்றால்... காடுதான் என்னுடைய முதலாவது வேதம். அங்கே ஒரு பூ எப்படி மரிக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிகிறது. அந்த ஒரு சிறுவிதையானது நிலத்தின் மேல் விழுந்து மக்கி அதிலிருந்து எல்லாம் காணாமல் போய்விடுகிறது. அடுத்த வருடத்தில் அங்கே அவ்விதமான ஒன்று இருந்ததாக எந்த தடயத்தையும் காண முடியாது. நீங்கள் அந்த மண்ணை ஒரு கைபிடியளவு எடுத்து ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்றாலும், அதிலே ஜீவனின்கிருமி இருக்கிறதென்று எந்த ரசாயன நிபுனராலும் சொல்ல முடியாது. ஆனால் சூரியன் உதிக்கும் போது, அது மறுபடியும் ஜீவனை பெற்றுக் கொள்ளும். அது மறுபடியும் ஜீவனைப் பெற்று, ஜீவன், மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் உண்டென்று எனக்கு அறிவித்தது. 48சூரியனானது காலையில் உதிக்கும்போது ஒரு சிறு குழந்தை பிறக்கிறதை போன்று பார்க்கிறேன். எட்டு மணிக்கு பள்ளிக்குப் போக துவங்குகிறது. ஏறக்குறைய பத்து மணிக்கு வெளியே கல்லூரிக்குச் செல்லுகிறது. மேலும் மதிய நேரத்தில் அதினுடைய முழு பெலத்தில் இருக்கிறது. இரண்டு மணி ஆகும் பொழுது அது ஐம்பத்தைந்து வயதை எட்டுகிறது. அதன் பிறகு நான்கு மணியளவில் எண்பது அல்லது எண்பத்தைந்து வயதை எட்டி மறைந்து போகிறது. அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினது. ஆனால்? அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினது என்றால் அததான் அதனுடைய முடிவா? இல்லை, பிறப்பு, ஜீவன், மரணம் மற்றும் உயிர்தெழுதல் உண்டென்று சாட்சி கொடுக்கும்படியாக அடுத்த நாள் காலையில் மறுபடியும் உதிக்கிறது. முதலாவது, நிலத்திலே புதைக்கப்பட்ட விதையானது முளைப்பிக்கப்படவில்லை என்றால், அது வளராது. அது வளர்ந்து வருவதற்கு தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டும். அவ்விதமாகத் தான் நாமும். நாமும் முளைப்பிக்கப்பட்ட விதையாய் நிலத்திலே போடப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டும் அல்லது முதலாவது உயிர்தெழுதலிலே நாம் உயிர்த்தெழ முடியாது. கடைசியில் நடக்கப் போகிற நியாயத்தீர்ப்பில் தான் வருவோம். இது ஒரு கலப்பினம் பண்ணப்பட்ட சோளம் போல் இருக்கிறது. அது பெரிதாய் வளர்ந்து வருகிறது. சூரியனுடைய நியாயத்தீர்ப்பில் மரித்து கடந்து போகிறது. அத்துடன் அது அவ்வளவுதான். நிச்சயமாக சரிதான். ஆனால் உண்மையான வித்து மறுபடியும் ஜீவித்து தன்னை மீண்டுமாய் உற்பத்தி செய்து கொள்ளும். 49மரத்திலுள்ள ஜீவனைப் பாருங்கள், உறைபனி வருவதற்கு முன்பாக அல்லது ஏதாவது நடப்பதற்கு முன் ஏதோ இயற்கையான காரியம் அந்த மரத்தை பற்றிப் பிடித்து, “உறைபனி வருகிறது, ஆகவே உடனடியாக நிலத்திற்குள் போய்விடு. உடனடியாக மரத்தின் கீழ் போய்விடு” என்று சொல்லும். அது அப்படி போகவில்லை என்றால் அந்தமரத்தையே கொன்று விடும். உறைபனி கரையும் மட்டும் அது கீழே மறைத்துக்கொள்ளும். அது கரைந்த பின்னரே மறுபடியும் மேலே வரும். ஏதோ ஒரு புத்தி அதை அப்படி செய்யும்படி செய்கிறது. அந்த புத்திகூர்மை என்னவென்று தெரியுமா? அந்த மரம் தன்னை மறைத்து கொள்ளும்படியாக கீழே சென்று மறுபடியும் மேலே வரும்படி எந்த புத்தி கூர்மை சொன்னதோ அதை எனக்கு விளக்குங்கள். அப்போது நீ யார், எங்கிருந்து வந்தாய், என்ன செய்தாய், எங்கே போகிறாய் என்று எனக்கு சொல்லுகிற புத்தி கூர்மையைக் குறித்து நான் உங்களுக்கு சொல்லுவேன். அதுவும் இதுவும் ஒரே காரியம் தான். ஏனென்றால் இரண்டிற்குமே ஒரே தேவன் தான். நிச்சயமாக அதே தேவன்தான் காரியங்களைச் செய்கிறார். இதை நினைவு கூருங்கள் நண்பர்களே. 50ஒரு நாள் நான் வழக்கமாக செல்லும் வடக்கு பகுதியில் இருக்கும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அங்கே என்னுடைய நண்பரோடு வேட்டையாடினேன். அவரோடு வேட்டையாடுவது எனக்கு மிகவும் பிரியம். அவர் பாதி இந்தியனும் கூட. அவருடைய பெயர் பெர்ட் கால் (Burt Caul). அவர் ஒரு அருமையான மனிதன். எனக்கு தெரிந்தமட்டில் அவர் இங்கு எங்கேயோ உட்கார்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் இந்த தெற்கு பகுதிக்கு எப்பொழுதும் வருவது வழக்கம். அவர் ஒரு பெரிய வேட்டைக்காரர். அவரைக் குறிந்து கவலையே பட வேண்டாம். அவர் எங்கேயும் தொலைந்து போகவே மாட்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து வேட்டையாடி இருக்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்ததிலேயே மிகவும் கொடூரமான நபர் யார் என்றால் இவர்தான். என்னை வருத்தப்படும்படியாகவே குட்டி மான்களைச் சுடுவார். ஏனென்றால் எனக்கு அவ்விதமான குட்டி மான்கள் கொல்லப்படுவதைப் பார்க்க விருப்பமில்லை. அதை கொல்லும்படி அரசு உத்தரவுகொடுக்கும் என்றால் அதை கொல்வதில் எந்த தவரும் இல்லை. அநேக வருடங்களாக நான் காட்டிலாகா அதிகாரியாய் இருந்து வந்தேன். காட்டை பேணிக் காக்கிறவனாக இருக்கிறேன். விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் விசுவாசிக்கிறவன். ஆனால் அவைகளை அப்படியே பெருகவிட்டால், அவைகள் உணவிற்கு இங்கு வந்துவிடும்.சிலவற்றை நீங்கள் அடித்து புசிக்காவிட்டால் அவைகள் நோய்யுண்டு அழிந்துவிடும். இல்லையென்றால் பஞ்சத்தில் சாகும். ஆனால் சட்டம் என்ன சொல்லுகிறதோ அதை செய்யுங்கள். அவைகளை எப்படி கையாளுவதென்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதை பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் பெர்ட் எந்த உணர்வும் இல்லாமல் என்னை வருத்தப் படுத்தும்படியாகவே அவைகளை கொல்லுவார். அவர் “பில்லி நீர் ஒரு நல்ல வேட்டைக்காரன். ஆனால் உனக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், நீ ஒரு வேட்டைக்காரன் என்பதைக் காட்டிலும் அதிகமாக ஒரு பிரசங்கியாய் இருக்கிறாய். உனக்கு பயந்த சுபாவம் அதிகம்” என்று அவர் சொல்லுவது வழக்கம். அதற்கு நான், “பெர்ட், நீ கொடூரமானவன், அவ்வளவுதான்” என்றேன். அந்தப்படியாக நாங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தோம். 51ஒரு நாளில் நான் மேலே சென்றேன். அன்று சற்று அலுவலில் அதிகமாக வேலை செய்ய வேண்டியதாய் இருந்தது. அது வேட்டைக் காலம் முடியும் நேரம். வெள்ளை வால் உடைய மானை நீங்கள் இங்கு கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. ஓ‚ நீங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்து தப்பிக்கக்கூடிய நிபுணர் ஹொடினியைக் (Houdini) குறித்து பேசுகிறீர்கள். ஆனால் இவைகள் அவரைக் காட்டிலும் சிறந்தவைகள். அந்த பருவகாலம் முடிவடையும் நேரத்தில் சில முறை அவைகள் சுடப்பட்டிருந்தன. ஒரு நாள் காலையில் நாங்கள் மாநில வனப் பகுதியான பிரசிடென்ஷியல் ரேஞ்சு (Presidential Range) பகுதியைக் கடந்து போகப் புறப்பட்டோம். அப்பொழுது பனியானது ஆறு அங்குலம் வரைமேலே இருந்தது. மேலும் நாங்கள் எப்பொழுதும் எடுத்துச் செல்லுகிற சூடான சாக்லேட் பானத்தையும் சேன்ட்விட்சையும் எடுத்துக் கொண்டோம். எங்களுக்கு மான் கிடைக்கவில்லையென்றால், மத்தியான நேரத்தில் நாங்கள் இருவரும் மலையிலே பிரிந்து சென்றுவிடுவோம். மறுபடியும் இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு திரும்பி வந்துவிடுவோம். மானைப் பிடிப்போம் என்றால் அதை தொங்க விட்டு வந்து விடுவோம். பிறகு அதை எங்கே தொங்க விட்டோம் என்று அறிந்து மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து அதை எடுத்துக் கொள்வோம். ஆகவே அந்த காலையிலே தானே நாங்கள் மேலே சென்றோம். நான் புறப்படுவதற்கு முன்பாக, “பில்லி, இந்த ஆண்டில் உனக்கு ஒன்றை நான் வைத்திருக்கிறேன்” என்று சொன்னான். “அது என்ன,” என்று கேட்டேன். உடனே அவருடைய கையை பாக்கெட்டுக்குள் போட்டு ஒரு சின்ன விசிலை எடுத்தார். அதினுடைய அளவு இவ்வளவு பெரியதாக இருக்கும். அவர் ஊதினார். அதினுடைய சத்தம் ஒரு குட்டி மான் தன்னுடைய தாய்க்காக அழுகிறதை போன்று இருந்தது. உங்களுக்குத் தெரியும், ஒரு சின்ன குட்டி மான் தன்னுடைய தாய்க்காக அழும். அதற்கு நான், “பெர்ட் நீ என்ன இவ்வளவு கொடூரமானவனா?” என்றேன். அதற்கு அவர், “ஓ, பிரசங்கிமார்கள் எல்லாம் ஒரே மாதிரி பயந்த சுபாவம் அதிகமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்” என்றார். 52ஆகவே கிட்டத்தட்ட பதினோரு மணியளவில் மலைக்கு மேலே போக ஆரம்பித்தோம். அங்கே இந்த அறை அளவிற்கு ஒரு வழி இருந்தது. ஒருவேளை இந்த அறையை விட சிறிது பெரியதாய் இருக்கலாம். நாங்கள் எந்த தடயத்தையும் இன்னும் காணமுடியவில்லை. இரவில் நிலா வெளிச்சத்தில் அவைகள் புசித்துக் கொண்டிருந்தது. ஆகவே அவைகளை கண்டு பிடிப்பது மிக கடினமாக இருந்தது. அவைகள் ஒளிந்துக் கொண்டும் அமைதியாக படுத்துக் கொண்டும், புதர்களின் பின்னாலும் அந்த அடர்ந்த மரங்களினூடேயும் இருந்தன. அவைகள் கால்களை மடக்கி பாசிகளை சாப்பிட்டு அதை மறந்து விட்டுவிடும். ஆகவே நாங்கள். . . 53அங்கே அந்த வழியில் நான் வந்து அடைந்தேன். அப்போது அவன் உட்கார்ந்தான். அங்கே பனி இருந்தது. அப்பொழுது அவன் தன்னுடைய பாக்கெட்டில் கையைப் போடுவதை கவனித்தேன். நான் அவனுடைய பிளாஸ்க் பாட்டிலை எடுத்து சாக்லேட் பானத்தை குடிக்கப் போகிறான் என்று நினைத்தேன். அப்படியே இரவு உணவையும் முடித்து அவன் ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு வழியாக காட்டிற்குள் பிரிந்து செல்லப் போகிறோம் என்று நினைத்தேன். நானும் பசியாய் இருந்ததினால் என்னுடைய சான்ட்விட்சை எடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய துப்பாக்கியை மரத்தின் மேல் சாய்த்து, என்னுடைய முதுகில் இருக்கும் பையில் கையைப் போட்டு அவனை நோக்கிப் பார்த்தேன். அவனும் என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் பல்லியினுடைய கண்களை போன்று இருந்தது. இன்றைக்கு ஸ்திரீகள் கண்களில் சாயம்பூசி வேடிக்கையாக, நாயை போன்று எல்லாவற்றையும் சாயம் பூசினதைப் போன்று இருந்தான். நல்லது, அவனுடைய கண்கள் அவ்விதமாக காணப்பட்டது. ஒரு பல்லியைப் போன்று சற்று சரிவானதாக இருந்தது. அவன் என்னை பார்த்த போது, “அவனுடைய சிந்தையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது” என்று நினைத்தேன். அவன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து அவனுடைய விசிலை எடுத்தான். “பெர்ட், உனக்கு வெட்கமாயில்லையா?” என்று கேட்டேன். 54அவனோ அதை எடுத்து ஊதினான். அவன் ஊதினபோது கிட்டத்தட்ட முப்பது கெஜம் அல்லது அதைவிட கொஞ்சம் தூரத்தில் இருந்து ஒரு பெரிய மான் எழுந்து நின்றது. இப்பொழுது அந்த மான் ஒரு தாய் மானாயிருந்தது. அந்த சத்தம் அதினுடைய குட்டி அழுகிறதை போன்று இருந்தது. அவன் விசிலை ஊதினபோது, அது குதித்து எழுந்தது. அது அப்படி செய்வதற்கு வாய்பே இல்லை. நாங்கள் அங்கே இருக்கிறோம் என்று அது அறிந்திருக்கிறது. இருந்தாலும் இப்பொழுதோ அதினுடைய குட்டி தொல்லையில் இருக்கிறது. மறுபடியும் அவன் அதே பல்லிக் கண்களுடன் என்னை நோக்கிப் பார்த்தான். அவன் சுடுவதற்காக தன்னுடைய துப்பாக்கியை தயார்படுத்தினான். அவன் துல்லியமாகச் சுடக்கூடியவன். ஓ அவன் மிக தேர்ச்சி, திறமைவாய்ந்தவன். அது அங்கேயே மரித்துவிடும். ஓ‚ அது அருமையானதொன்று. அவன் மறுபடியும் விசிலை ஊத ஆரம்பித்தான். அந்த வயதான தாய் மான் நேராக அந்த காலி இடத்திற்கு நடந்து வந்தது. ஓ சகோதரனே அது வழக்கத்திற்கு மாறானது. அவைகள் அப்படி வராது. முதலாவது நிலையில் அவை எழுந்திருக்கவே எழுந்திருக்காது. அப்படி எழுந்திருக்கும் என்றாலும் அது இன்னொரு வழியில் சென்றிருக்கும். ஆனால் இங்கேயோ சரியாக அந்த வழியில் நடந்து வந்தது. நாங்கள் அங்கே இருக்கிறோம் என்று அதற்கு நன்கு தெரியும். துப்பாக்கியின் விசையிழுப்பை தட்டின போது அது திரும்பி சரியாக அந்த வேட்டைக்காரனை நோக்கி பார்த்தது. அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு பதிலாக அங்கேயே நின்றது. அதினுடைய பெரிய காதுகளை உயர்த்தி, கண்களை அகல விரித்து அப்படியாய் அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. 55அது என்னது? அது ஒரு தாய். அது அதன் குட்டியின் சத்தம். அதினுடைய குட்டி தொல்லையில் இருக்கிறது. ஒரு குட்டி மானைப் போல அழுது கொண்டிருந்தது. அது பாவனை செய்யவில்லை. அது நடிக்கவில்லை. அது உண்மை. அது பிறப்பில் இருந்தே ஒரு தாயாக இருந்தது. அவள் ஒரு தாய். அவர் துப்பாக்கியை குறி வைத்தார். “பெர்ட்டே, உன்னால் எப்படி அதை செய்ய முடிகிறது, நீ எப்படி அப்படி செய்ய முடியும்?” என்று நினைத்தேன். 56என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. நான் பின்னாக திரும்பிக் கொண்டேன். “ஓ, கர்த்தாவே, தன்னுடைய குட்டியை உண்மையான இருதயத்தோடு தேடுகிற தாயின் இருதயத்தை இந்த மனிதன் சுட்டு சிதறும் அளவிற்கு எப்படி இவ்வளவு கொடூரமானவனாக இருக்கிறான்?” என்று எண்ணினேன். அங்கிருந்து அதை வஞ்சித்து வெளியே எழுப்பி, வரும்படி செய்தான். அவன் மிகவும் சரியாக குறிபார்த்து சுடக்கூடியவன் என்று எனக்கு தெரியும். அதினுடைய சுத்தமான இருதயத்தை நோக்கி சுட்டு மறு பக்கம் வெளியே வரும்படி வெடிக்கச் செய்வான் என்றுஅறிந்திருந்தேன். அந்த தாயானது அதினுடைய குட்டியின் சத்தமாய் இருக்கிறதினாலே அங்கே வந்தது. இப்பொழுது அடையாளத்தை குறித்து பேசினால், இதோ, விசுவாசமாயிருப்பதற்கான அடையாளம். ஏனென்றால் அவளுக்குள்ளாக ஏதோ ஒன்று இருக்கிறது. அவள் ஒரு தாயாக இருக்கிறாள். பின்னர் நான் திரும்பி பார்த்தபோது “ஓ தேவனாகிய கர்த்தாவே, இவ்விதமாய் செய்வதற்கு ஒரு மனிதன் எப்படி இவ்வளவு கொடூரமானவனாய் இருக்க முடியும்?” என்றேன். அதன் பிறகு நான் காத்துக் கொண்டு, காத்துக்கொண்டு இருந்தேன். ஆனால்துப்பாக்கி இன்னும் சுடவில்லை. எந்த நேரத்திலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பேன். அப்போது அந்த பலமுள்ள குண்டு வெடித்து, அதினுடைய இருதயத்தில் பாய்ந்து செல்லும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் ஏன் இது வெடிக்கவில்லை என்று நினைத்தேன். நான் இந்த பக்கமாக நின்று என்னுடைய கண்களை மூடின வண்ணமாய் ஜெபித்துக் கொண்டு இருந்தேன். அதன் பின்னர் என்னுடைய தலையைத் திருப்பிப் பார்த்தபோது அந்த துப்பாக்கியின் குழல் இந்த பக்கமாக போய்கொண்டிருந்தது. சில நிமிடம் நான் அதை கவனித்தேன். அவன் துப்பாக்கியை இப்படியும் அப்படியுமாக புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவன் என்னை திரும்பி பார்த்தபோது அவனுடைய பல்லி கண்கள் வேறு விதமாய் மாறினது. அவனுடைய கண்ணத்தில் கண்ணீர் வடிந்தோடினது. துப்பாக்கியை கீழே தூக்கிப் போட்டு,“பில்லி, நான் செய்ததெல்லாம் போதும். நீ பேசுகிற அந்த இயேசுவினிடத்தில் என்னை வழி நடத்தும்” என்றான். என்ன நடந்தது? சரியாக அந்த பனி நிறைந்த இடத்தில் கொடூரமான இருதயமுடையவனை வழி நடத்தினேன். அவன் இப்பொழுது ஒரு சபையில் மூப்பராக இருக்கிறான். அது என்ன? அவன் ஏதோ ஒரு உண்மையான காரியத்தைக் கண்டான், ஏதோ ஒரு அசலான காரியத்தைக் கண்டான். அதை வேதபாண்டித்தியமாகவோ அல்லது ஏதோ சரித்திர கதையாகவோ காணவில்லை. அவன் தேவனை நிஜத்தில் கண்டான் (He saw God in reality). அது தான் அவனைக் கொண்டுவந்தது. ஓ‚ இங்கிருக்கிறவர்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, அந்த மானின் தாய் குணத்தை பெற்றவர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? அதாவது மரணம் உங்கள் முகத்தின் நேராக நிற்கும்போதும், இப்படி ஒரு அசலான அனுபவத்தை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? என்பதையே குறிப்பிடுகிறேன். (சபையார் ஆமென் என்கின்றனர்) நாம் தலைகளைத் தாழ்த்துவோம். 57பரலோக பிதாவே, நேரம் மிக தாமதமானது. ஆனாலும் மக்கள் இன்னுமாய் கவனத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் அருமையாய் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் கர்த்தாவே இந்த சிறிய கதையானது இன்னும் என்னுடைய ஞாபகத்தில் இருக்கிறது. அந்த குளிர்ந்த நவம்பர் மாதத்தில் அங்கே நான் நின்று கொண்டிருந்த போது காற்றானது மலைகளிலே வீசிக் கொண்டிருந்தது. அப்போது அவன் என்னுடைய கால்களை பிடித்துக் கொண்டிருக்கும் போது அவனுடைய கண்களிலிருந்த கண்ணீர் வடிந்து அவனுடைய தாடிகளில் ஓடுகிறதை காண்கிறேன். அவன் கண்ணீரோடு “பில்லி நீ என்னிடம் முழுவதும் அன்பாயிருக்கிற ஒருவரைக் குறித்து பேசி இருக்கிறாய். இதோ அதினுடைய நிஜத்தை இங்கு காண்கிறேன்” என்றான். கர்த்தாவே இதோ அந்த மானுக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று அவனை அங்கே வெளியே வரும்படி செய்தது. அது உண்மையான தாய்மைத்துவம். அசலான அன்பும், மற்றும் தாய்த்தன்மையும் எங்கேயோ இருந்தது என்பதற்கு இது அடையாளமாய் இருக்கிறது. 58ஓ தேவனே‚இன்றிரவு உம்முடைய வார்த்தை பேசட்டும். அசலான, உண்மையான பரிசுத்த ஆவி பேசட்டும். ஏதோ உணர்ச்சி வசப்படுவதோ அல்லது உற்சாகத்தினாலோ அல்ல. அதெல்லாம் சரிதான். ஆனால் உண்மையானதாய், வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருக்கட்டும். “வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” நீர் உம்முடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் அடையாளப்படுத்தினீர். நீர் பூமியில் இருந்த போது அவர்களை தேவர்கள் என்று அழைத்தீர். மற்றும் “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று நீர் சொல்லியிருக்க, நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே எவ்விதத்தில் நீங்கள் என்னைக் குற்றப்படுத்தலாம்” என்றார். ஓ தேவனே, இந்த உலகம் தன்னுடையவர்களை அறிந்திருக்கிறது. இவ்வளவு காலமாக குருடாய் இருந்து கொண்டு வருகிறது. மற்றும் பிதாவே, இன்றிரவு, நீர் இந்த மக்களின் கண்களை திறக்கும்படி ஜெபிக்கிறேன், நாங்கள் தாமே ஒரு அசலான கிறிஸ்தவர்களாய், உண்மையான விசுவாசிகளாய் மாறட்டும். ஏனென்றால் சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார். எல்லா தீர்க்கதரிசிகளிலும் பெரியவர் இங்கு இருக்கிறார். தேவ குமாரன் தாமே பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இங்கு இருக்கிறார். அவர் தாமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட படியாக “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது”. காஸ்மாஸ் (Kosmos) என்ற வார்த்தைக்கு “உலகத்தின் சட்டத்தை நிலை நிறுத்தும் குழு” என்று அர்த்தம், அவை இனி என்னைக் காணாது, ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிவு மட்டும் உங்களுக்குள் இருப்பேன்“, மற்றும் பிதாவே நீர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் என்றீர். அது உண்மை என்று நாங்கள் அறிவோம். ஓ‚ தேவனே, இன்றிரவு எங்கள் மேல் நீர் இரக்கமாய் இருக்கும்படிக்கு ஜெபிக்கிறேன். 59நம்முடைய தலைகள் வணங்கியிருக்கட்டும். நம்முடைய தலைகள் வணங்கியிருக்கிற நேரத்தில் யாராவது. . . இப்பொழுது தேவனுடைய பிரசன்னத்தில் உத்தமமாய் இருங்கள். எந்த ஒரு காரியமும் நடக்கிறதற்கு முன்பாக உங்கள் இருதயத்தில் அந்த தாய் மான் இருந்ததை போன்று ஒரு உண்மையான கிறிஸ்தவர்களாய் நீங்கள் இருக்கவில்லை என்று அறிவீர்கள். அது தாயாக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் அது பிறப்பிலேயே தாயாக பிறந்தது. அவ்விதமாக இருப்பதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை. பிறப்பிலேயே தாயாக இருந்தது. இப்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லை என்றால், கிறிஸ்துவுக்குள் அதே அன்பை பெறவில்லை என்றால், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. நீங்கள் அவரை விசுவாசியுங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். இப்பொழுது அந்த தாயினிடத்தில் உள்ள அன்பைப் போல கிறிஸ்தவ அன்பை நீங்கள் உங்களுக்குள்ளாக பெற்றுக் கொள்ள விரும்புவீர்களானால், உங்களுடைய தலைகள் வணங்கியிருக்கட்டும், எல்லோருமாக, ஒவ்வொரு கண்ணும் மூடியிருக்கட்டும், அப்படியென்றால் உங்களுடைய கரத்தை உயர்த்தி “சகோ. பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள்” என்று சொல்லுவீர்களா? நான் நிச்சயமாக அதைச் செய்வேன். சகோதரனே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஓ என்னே, தளம் முழுவதிலும், பால்கனியிலும், எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். 60வெட்கப்படாதிருங்கள்‚ அவரைக் குறித்து நீங்கள் இங்கு வெட்கப்படுவீர்களானால் “உன்னைக் குறித்து பிதாவிற்கு முன்பாகவும் பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் வெட்கப்படுவேன்” என்றார். நீங்கள் இப்பொழுது அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள. அவர் இங்கு இருக்கிறார். அந்த மகத்தான பரிசுத்தஆவியானவர் இங்கு நிச்சயமாகவே இருக்கிறார். மோசேயோடு இருந்த அதே அக்கினி ஸ்தம்பம்சரியாக இங்கு இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள். அவர் இந்த பூமியின் மேல் இருந்தபோது, “நான் தேவனிடத்தில் இருந்து வந்தேன். தேவனிடத்திற்கே செல்லுகிறேன்” என்றார். மற்றும் அவர்கள் இப்படியாக “மோசே எகிப்திலுள்ள பொக்கிஷங்களை எல்லாம் விட்டு, இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எகிப்திலுள்ள எல்லா பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக பாக்கியமாக எண்ணினான்”. அவன் வனாந்திரத்திற்கு கிறிஸ்துவோடு கூட போனான். அந்த அக்கினி ஸ்தம்பமானது தேவனிடத்திலிருந்து வெளியே வந்த லோகாஸ் (Logos) என்றும், அதுவே இயேசு என்றும், உடன்படிக்கையின் தூதன் என்றும் எந்த வேதமாணாக்கனும் அறிந்ததொன்றாகும். அதன் பிறகு அவர் மரித்த போது அவர் பரத்திற்கு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார். பிறகு தமஸ்குவுக்கு போகிற வழியிலே சவுலை அவர் சந்தித்த போது, அவர் திரும்பவுமாக அக்கினி ஸ்தம்பமாக மாறி அந்த பிரகாசத்தினாலே பவுலுடைய கண்களை அவர் பார்க்கக் கூடாதபடி செய்தார். இப்பொழுது அவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இன்றிரவு இங்கு இருக்கிறார். அவருக்கு முன்பாக “தேவனாகிய கர்த்தாவே, அவ்விதமான ஒரு அனுபவத்தை நான் பெறவில்லை, நான் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லி உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா? இங்கே வாருங்கள் என்று நான் கேட்கவில்லை. அவ்விதமாக உணருவீர்களானால் உங்களுடைய கரத்தை மாத்திரம் அவருக்கு உயர்த்துங்கள் என்று கேட்கிறேன். இன்னும் யாராவது கரங்களை உயர்த்தாமல் இருக்கிறீர்களா?கரங்களை உயர்த்துங்கள். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. 61பரலோகப் பிதாவே, இவர்கள் உம்முடையவர்கள். விஞ்ஞானத்தின் படியாக நாங்கள் எங்களுடைய கரங்களை உயர்த்த முடியாது என்று விஞ்ஞானம் இவ்விதமாக சொல்லுகிறது. புவியீர்ப்பு சக்தி எப்பொழுதும் கீழே வைக்கும்படி செய்யும். ஆனால் புருஷனுக்குள்ளும் ஸ்திரீக்குள்ளும் ஒரு ஆவி இருக்கிறது அவைகள். .. இன்னொரு ஆவி அவர்களிடத்தில் வந்தது. அதாவது பரிசுத்த ஆவி வந்து, “உன்னுடைய கரத்தை உயர்த்து” என்று சொன்னது. அப்போது அவர்கள் அந்த புவியீர்ப்பு சக்தியை முறியடித்து அவர்களை உருவாக்கின தேவனுக்கு தங்களுடைய கரங்களை உயர்த்தி “நான் ஒரு உண்மையான கிறிஸ்தவனாய் இருக்க விரும்புகிறேன்” என்கிறார்கள். பரலோகப் பிதாவே, ஒவ்வொருவரையும் ஒரு உண்மையான கிறிஸ்தவர்களாக மாற்றும்படி ஜெபிக்கிறேன். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்முடையவர்கள் ஆண்டவரே. அந்நாளில் அந்த சிறிய மான் அந்த இடத்தில் வந்தது ஒரு அடையாளமாய் இருக்கிறது என்று அன்றைக்கு அவ்வளவாக அறியாதிருந்தேன். பிதாவே நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். ஆகவே நீர் அவர்களை ஏற்றுக் கொள்வீராக. அவர்கள் உம்முடைய இச்சுவிசேஷத்தின் வெற்றி சின்னமாய் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடையவர்கள். இவ்விதமாக எந்த மனிதனும் அவர்களை என்னுடைய இருதயத்திலிருந்தும், என்னுடைய கைகளில் இருந்தும் பறிக்க முடியாது என்று சொன்னீர். மேலும் “என்னுடையவைகளெல்லாம் பிதாவுக்கு சொந்தமானது. அவருடைய கரத்திலிருந்து எந்த மனிதனும் அவர்களை பறிக்க முடியாது” என்று சொன்னீர். யோவான் 5:24-ல் இயேசுவானவர் இவ்விதமாக “என் வசனத்தைக் கேட்டு, என்னைஅனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்று கூறினார். கர்த்தாவே அது உம்முடைய வார்த்தை. இதோ பாவனையாக விசுவாசிக்கிறவர்களுக்கு அல்ல. ஆனால் உண்மையாய் விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. பிதாவே இவர்கள் உம்முடையவர்கள். அவர்களை இப்பொழுது உமக்கே கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 62இப்பொழுது ஒரு கனம் பயபக்தியுடன் இருங்கள். இப்பொழுது முடிப்பதற்கு இது சரியான நேரமாய் இருக்கிறது. ஆனால் ஒரு கனம் சற்று காத்திருங்கள். அதை செய்வதற்கு முன்பாக, எங்கே இரண்டு மூன்று பேர் அவருடைய நாமத்தில் கூடி இருக்கிறார்களோ அங்கே இருப்பேன் என்று இயேசு கிறிஸ்து வாக்குரைத்ததை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ஆமென் என்கின்றனர்) அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்?(ஆமென்). அவர் இன்றிரவு இங்கு இருப்பாரானால், அன்று எப்படி இருந்தாரோ அந்தபடியே இன்றும் இருப்பார். அவர் அதே காரியத்தைதான் செய்வார். வேதமானது “அவர் நம்முடைய பெலவீனங்களால் தொடக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார்” என்று கூறினது. அது சரிதானா? (ஆமென்). புதிய ஏற்பாட்டில் எபிரேயர் 3-ம் அதிகாரத்தில் 'நம்முடைய பெலவீனங்களினால் தொடக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார்“. இப்பொழுது தேவன் மேல் விசுவாசத்தைக் கொண்டிருங்கள். இப்பொழுது உண்மையாய் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 63மேலும் இக்கூட்டத்தில் வியாதியோடு இருக்கிறவர்களாகிய நீங்கள்... எத்தனை பேர் சுகவீனமாய் இருக்கிறீர்கள்? “நான் சுகவீனமாய் இருக்கிறேன்” என்று சொல்லுகிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது மிகவும் அமைதியாக, எல்லோரும் அமைதியாக இருக்கவும். இப்பொழுது நீங்கள் இப்படியாக ஜெபியுங்கள். “கர்த்தராகிய இயேசுவே சகோதரன் பிரான்ஹாமுக்கு என்னைத் தெரியாது. ஆனால் அவர் ”சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார்“ என்று இன்றிரவு சொன்னார். மற்றும் அந்த காரியம் திரும்பவும் நிகழும் என தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவேன். இதோ கடந்த நூறு வருடங்களாக, ஆயிரம் வருடங்களாக அப்படியான காரியம் இந்த உலகத்தில் நடக்கவில்லை. ஆனால் மல்கியா 4 மற்றும் பரிசுத்த லூக்கா 17 இன்னும் அனேக வாக்குத்தத்தத்தின் படியாக அது திரும்பவும் வரும் என்றீர். “மனுஷ குமாரன் வெளிபடும் போது” அந்தக் காரியம் நடக்கும் என்று சொன்னீர். அது உம்முடைய வார்த்தையாக இருந்தாக வேண்டும். ஏனென்றால்..... 64“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது,அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில்வாசம் செய்தது. மற்றும் அந்தவார்த்தை இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறதாய் இருக்கிறது”. அந்த வார்த்தையே தீர்க்கதரிசிகளிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தான் குமாரனுக்குள்ளும் இருந்தது. அதே வார்த்தை தான் இன்றும் உங்களுக்குள் இருக்கிறது. அந்த வார்த்தையானது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டும் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டும் இருக்கிறது. அனேக போலியானவைகளும், அனேக மாமிசபிரகாரமான போட்டிகளும் இருந்தாலும், எதுவும் நிஜத்திலிருந்து அதை எடுக்க முடியாது. ஒரு உண்மையான பரிசுத்த ஆவியானவர் உண்டு. ஒரு உண்மையான தேவன் உண்டு. இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இதோ இங்கே என்னை நோக்கி பாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால் இப்படியாக 'தேவனாகிய கர்த்தாவே, நான் ஜெபிக்கப் போகிறேன். நீர் சகோதரன் பிரான்ஹாம் அவர்களுக்கு வெளிப்படுத்தும். நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும். நீர் அவர் மூலமாக திரும்பி என்னுடைய தொல்லை என்னவென்று சொல்லும். ஏனெனில் அவருக்கு என்னைத் தெரியாது. அப்போது உம்முடைய பிரசன்னம் இங்கு இருக்கிறது என்று நான் அறிவேன்“ என்று சொல்லுங்கள். 65நண்பர்களே, பெந்தெகொஸ்தே மக்கள் மத்தியில் இருக்கிற பிரச்சனை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அதிகமாய் பார்த்துவிட்டார்கள். ஒரு நாளில் ஒரு அனுபவம் வாய்ந்த வயதான கப்பலோட்டி கடலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு எழுத்தாளன் கடலுக்குள் போய் கொண்டிருப்பதைக் கண்ட போது, அந்த வயதான கப்பலோட்டி அந்த எழுத்தாளனை பார்த்து, “ஐயா எங்கே போகிறாய்?”என்று கேட்டார். அதற்கு அவர், “கடலுக்குள்போகிறேன், ஓ அந்த உப்பு நீரை முகர விரும்புகிறேன். அதினுடைய நீல வானத்தையும்,வெள்ளை மேகத்தையும் கடல் பறவைகளையும் பார்க்க விரும்புகிறேன்” என்றார். அதற்கு அந்த கப்பலோட்டி,“ஐம்பது வருடங்களுக்கு முன்பாக நான்அதின் மேலாகவே பிறந்தேன். அதில் எந்த கவர்ச்சியையும் நான் காணவில்லையே என்றார். அவ்வளவு தான். அவன் அதை அதிகமாகப் பார்த்ததினால் அது அவனுக்குச் சாதாரணமானதாகிவிட்டது. அதே காரியம் தான் மக்களாகிய நமக்கும் இருக்கிறது. நாம் தேவனை அதிகமாக கண்டிருக்கிறோம். ஸ்தாபனக் குழுக்களில் இருந்து வெளியே அழைக்கப்பட்டதான இந்த சபை, அவரை அவ்வளவு அதிகமாய் பழகிப் போனதாக மாறும் மட்டும் பார்த்து விட்டது. ஆகவே அவரை உதாசீனப்படுத்துகிறார்கள். நண்பர்களே ஒரு போதும் கிறிஸ்து உங்களுக்கு சாதாரணமானவராய் ஆகி விட அனுமதியாதேயுங்கள். ஒரு போதும் அப்படி செய்ய வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும், உங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றோடும் அவரை விசுவாசியுங்கள். இப்பொழுது தேவன் மேல் விசுவாசமாய் இருங்கள். 66இப்பொழுது ஜெபிக்கலாம். கர்த்தராகிய இயேசு தாமே இதை அருள்வாராக. நீங்கள் அவருடைய வஸ்திரத்தை மாத்திரம் தொடுங்கள். எனக்குத் தெரியாது. நீங்கள் தொடுங்கள். அவரை தொடமுடியும். இப்பொழுது ஜெபிக்கலாம். அவர் செய்யப் போகிறார் என்று நான் சொல்லவில்லை. ஒரே ஒரு கனம் போதும்,சரியாகி விடும். உங்களுடைய இருதயம் அவர் மேல் பொருத்தப்பட்டிருக்கட்டும். இப்பொழுது, அது ஒரு வெளிச்சம்‚ யாரும் புகைபடம் எடுக்க வேண்டாம், பிளாஷ் அடிக்கவேண்டாம். பயபக்தியுடன் இருங்கள். இதோ அது இங்கே இருக்கிறது. அங்கே கடைசியில் உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிற அந்த ஸ்திரீயின் மேலாக அது இருக்கிறது. ஸ்திரீயே, நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? நான் உனக்கு அந்நியன். உனக்கும் என்னை தெரியாது. நானும் உன்னை அறியேன். ஆனால் பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு அவர் சொன்னது போல அல்லது ஐந்து புருஷனை கொண்ட அந்த ஸ்திரீக்கு சொன்னது போல உன்னை எனக்கு விவரித்து, கர்த்தராகிய இயேசு என் மூலமாக உனக்கு அந்த தகவலை கொடுப்பாரானால், நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? அப்போது அது உண்மையா இல்லையா என்று உனக்குத் தெரியும். நல்லது. உன்னுடைய நீர் பையில் (bladder trouble) பிரச்சனை. அது சரி என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. பாருங்கள்? அது நிச்சயமாக சரிதான். இதோ, அவளுக்கு அருகாமையில் இருக்கிறவளே, நீ அவளுக்கு உதவி செய்யும்படி சென்றாய். உன்னுடைய கரத்தை கொண்டு அவளை தொட்டாய். நீ மிகவும் தயவுள்ளவளாய் இருக்கிறாய். இப்பொழுது தேவன் உன்னுடைய தொல்லை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அவரால் செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறாயா? உயர்ரத்த அழுத்தம். அது உண்மை சரி என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. 67அவளுக்கு அருகாமையில் உட்கார்ந்திருக்கும் ஐயா, தேவன் உன்னுடைய தொல்லை என்னவென்று எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா? அப்போது அது உண்மையா இல்லையா என்று நீர் அறிவீர். உங்களுடைய நரம்புகள் வீங்கி பருத்து இருக்கிறது (Varicose veins). நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே உட்கார்ந்து கொண்டு அழுகிறதைப் போன்று இருக்கிற அந்த சிறிய ஸ்திரீ, உனக்கு நரம்பு பிரச்சனை இருக்கிறது. அது நிச்சயமாக சரிதான். ஏதோ ஒன்று உன்மேல் நிழலிட்டு இருக்கிறது. பகல் நேரத்திலே நீ பெலவீனமாகிறாய் மற்றும் உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறாய். இதை பிசாசு உனக்கு சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் நீ அப்படி அல்ல. இன்றைய இரவில் இருந்து அந்த பிரச்சனை தீர்ந்தது. பாருங்கள்? நீ ஜெயத்தைப் பெற்றாய். அது உன்னை விட்டுப் போய்விட்டது. உன் மேலாக இருந்த அந்த கருப்பு நிழலானது உன்னை விட்டு கடந்து போய்விட்டது. அவளுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்திரீயே நீ அங்கே அழுது கொண்டு இருக்கிறாய். இது உன்னை சிலிர்க்க வைத்தது. இப்பொழுது நான் அவருடைய தீர்க்கதரிசி (அல்லது) ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? இது சிலரைத் தடுமாறச் செய்கிறது பாருங்கள். ஆகவே உன்னை எனக்குத் தெரியாது. நாம் இருவரும் அந்நியர்களாய் இருக்கிறோம். உன்னுடைய தொல்லை என்னவென்று தேவனால் எனக்கு சொல்ல முடியும் என்று விசுவாசிக்கிறாயா? நல்லது. உனக்கு இருதயத்தில் தொல்லை, சிறு நீரகத்தில் தொல்லை மற்றும் உனக்கு ரத்த சோகை இருக்கிறது. அது உண்மை என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. 68இங்கே சிவப்பு மற்றும் கோடுகள் உள்ள உடையை உடுத்தி சற்று பருமனான சரீரமுடைய ஒரு ஸ்திரீ இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறாள். அவள் இந்த ஜெப வரிசையிலே அழைக்கப்படும்படிக்கு விரும்புகிறாள். அது உண்மை என்றால் உன்னுடைய கையை உயர்த்து ஸ்திரீயே. உன்னுடைய தொல்லை என்னவென்று தேவனால் எனக்கு சொல்லமுடியும் என்று விசுவாசிக்கிறாயா?உன்னுடைய நண்பருக்கு எல்லாம் சரியாகிவிடும். ஆவிக்குரிய தொல்லை சரியாகிவிடும். மற்றும் நீ உன் முழு இருதயத்தோடு விசுவாசிப்பாய் என்றால், ஸ்திரீகளுக்கு இருக்கும் தொல்லை உன்னைவிட்டுப் போய் விடும். அது உண்மை என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. அதற்காக தான் நீ ஜெபித்துக் கொண்டு இருக்கிறாய் என்றால், நீ என்ன செய்கிறாய் என்று மக்கள் பார்க்கும்படி உன்னுடைய கரத்தை உயர்த்து. பாருங்கள்? நல்லது. நீங்கள் வெறும் விசுவாசத்தைகொண்டிருந்தால் போதும். பின்னால் இருக்கிறவரே..... நீங்கள் முன்பாக உட்கார வேண்டும்என்ற அவசியம் இல்லை. பின்னால் இருந்தே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பின்னால் ஒரு ஸ்திரீ இருக்கிறாள்.அவளுக்கு ஒரு பக்கத்தில் வளர்ச்சி இருக்கிறது. அவள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறாள். அது அவளை விட்டு நீங்கப் போகிறது. கர்த்தராகிய தேவனே எனக்கு உதவி செய்யும் படி ஜெபிக்கிறேன். திருமதி குட்மேன், உன்னுடைய பக்கத்தில் இருக்கும் அந்த வளர்ச்சியை தேவன் எடுத்து போடுவார் என்று உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நல்லது மக்கள் உன்னை காணும்படி உன்னுடைய கரத்தை மேலே உயர்த்து. நான் முற்றிலுமாக ஒரு அந்நியன். இதுவரை அவர்களை கண்டதேயில்லை. அதோ அவர்கள் அங்கே இருக்கிறார்கள். இவை எல்லாம் சரியா? உன்னுடைய கரத்தை உயர்த்து நல்லது. 69அங்கே கடைசியில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்திரீயானவள், பித்தப்பையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நீரிழிவு நோய் மற்றும் இருதய தொல்லை இருக்கிறது. திருமதி ஹோல்டர்பீல்ட் நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா ஸ்திரீயே. நீ இப்பொழுதே சுகமாவாய். சபையாரே, யாரும் நகர்ந்து போக வேண்டாம். கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறேன். நீங்கள் அப்படிச் செய்ய வேண்டாம். பாருங்கள், வியாதி ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு செல்லுகிறதாய் இருக்கிறது. பார்த்தீர்களா? உலகத்தில் இருக்கிறவைகளிலே அவிசுவாசம் தான் மிகவும் மோசமானதொன்றாகும். விசுவாசத்தை கொண்டிருங்கள். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த சிறிய ஸ்திரீ தன்னுடைய புருஷனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவர் குடிகாரர் அது சரி. அவர் குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நீ ஜெபித்து கொண்டிருக்கிறாய். அது சரியா? நல்லது எனக்கு உன்னை தெரியாது. ஜெப அட்டையை பெற்றுள்ளாயா? நீ பெறவில்லையா உனக்கு அப்படி ஒன்று தேவைப்படாது. நீ கொண்டிருக்கிற விசுவாசம் போதும். நீ எதையோ ஒன்றை தொட்டிருக்கிறாய். எனக்கு இருபது அல்லது முப்பது அடி தூரத்தில் இருக்கிறாய். நீ பிரதான ஆசாரியரை தொட்டாய். 70அங்கே பின்னால் இருக்கிற சிறிய ஸ்திரீஅவளுடைய புருஷனுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அங்கே அவள் பின்னாக இருக்கிறாள். அது சரியே. உன்னுடைய புருஷன் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மனிதன். ஒரு விதமான மனநிலை தளர்ச்சியுள்ளவர்;. இப்பொழுது அவரைக் காணவில்லை. அது உண்மை என்றால் உன்னுடைய கையை உயர்த்து. மற்றும் உன்னுடைய கையில் ஏதோ கோளாறு இருக்கிறது. உனக்கு ஒவ்வாமை போன்று ஏதோ ஒன்று இருக்கிறது. நீ எதையாவது தொடும் பட்சத்தில், அது இன்னும் உன்னுடைய கையை மோசமாக ஆக்குகிறது. அது உண்மையில்லையா? உன்னுடைய பெயர் திருமதி. பேட்டி (Mrs. Patty). உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அது உண்மை என்றால் உன் கையை உயர்த்து. ஆமென். பாருங்கள்? நீங்கள் விசுவாசிக்கும் படி சொன்னேன். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்திரீயை குறித்து என்ன? உன்னுடைய முகத்தில் ஏதோ ஒரு தழும்பு இருக்கிறது. ஒரு சிறிய தோல் புற்று நோய் போல் இருக்கிறது. நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? விசுவாசிக்கிறாயா? எனக்கு உன்னைத் தெரியாது. நீ எனக்கு புதியவராக இருக்கிறாய். ஆனால், அந்த காரணத்திற்காக நீ ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை. உனக்கு இருக்கும் இருதய கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது சரியா? இங்கே உட்கார்ந்திருக்கிற இந்த ஸ்திரீ. நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாய் என்றால், நீ உன்னுடைய சுகத்தை பெற்றுக்கொள்ளலாம். கடந்த இரவு உன்னுடைய புருஷன் அவருடையதை பெற்றுக் கொண்டார். நீ ஏன் அதை பெற்றுக் கொள்ளக்கூடாது. நீ பெண் பிரசங்கியாய் முன்பு இருந்தாய். நீ அறிந்தபடியாகவே உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, மற்றும் உன்னுடைய சிந்தையிலொரு விதமான சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. பாருங்கள், ஆனால் இப்பொழுது அது கிரியை செய்கிறது என்று நீ திருப்தியடைந்திருக்கிறாய்‚ அப்படித்தானே? நல்லது. அது உண்மை என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. கர்த்தர் மேல் விசுவாசமாயிரு. 71நீரிழிவு நோயைக் குறித்து என்ன நினைக்கிறீர் ஐயா‚ அதோ அங்கே உம்முடைய கையை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கிற நீர்? நீரிழிவு நோயிலிருந்து தேவன் உம்மை குணமாக்கி உம்மை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீரா? நல்லது ஐயா, தேவன் உம்மை சுகமாக்க முடியும். நீங்களும் எனக்கு புதியவராய் இருக்கிறீர். நீர் மாத்திரம் உமது முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீரானால்... அங்கே உட்கார்ந்திருக்கிற அந்த மனிதனுக்கு இருதயத்தில் தொல்லை இருக்கிறது. அவருடைய பின் பகுதியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. திரு. ஈஸ்டர் அவர்களே‚ அந்த காயம் ஒரு ரயில் விபத்தினால் ஏற்பட்டது. அது சரி என்றால் நீர் எழுந்து நில்லும். இயேசு கிறிஸ்து உம்மை சுகப்படுத்தி குணமாக்குவார். எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கின்றனர்) சாலமோனிலும் பெரியவர் இங்கு இருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்) நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரான இயேசு இந்த கட்டிடம் முழுவதுமாக கடந்து வந்து கிரியை செய்கிறார். அவர் இங்கு இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “ஆமென்” அதுவே நிஜம். அவர் என்ன நிறைவேறும் என்று கூறினாரோ அது அப்படியே தத்ரூபமாக நிறைவேறியது. “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்” என்று சொன்னபடியாக சரியாக இருக்கிறது. ஒரு விசை அவரை ஒரு ஸ்திரீ தொட்டதினால் மிகவும் பெலவீனமானார். வல்லமை என்னிடத்திலிருந்து புறப்பட்டது என்று சொன்னார். அவரோ அந்த தேவகுமாரன். நானோ கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. “இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளை செய்வான்” என்றார். கிங் ஜேம்ஸ் வேதாகமத்தில்(King James Bible) “மகத்தான” என்று கூறுகிறது என்று நான் அறிவேன். ஆனால் மூல அச்சிட்டிலே, “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்” என்று இருக்கிறது. 72இப்பொழுது நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்கின்றனர்) அவருடைய பிரசன்னம் இங்கு இருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா? (ஆமென்) அப்படியென்றால் விசுவாசிகளாகிய நீங்கள் ஏன் ஒருவர்மேல் ஒருவர் கைகளை வைத்து உங்கள் அருகில் உட்கார்ந்திருக்கிற நபருக்காக ஜெபிக்கக்கூடாது? ஒவ்வொருவரும் உங்கள் கைகளை மற்றவர் மீது வைத்து ஜெபிக்கிறதான நேரத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். உங்களுடைய சபையில் ஜெபிக்கிற விதமாக ஜெபியுங்கள். நீங்கள் எப்பொழுதும் விசுவாசித்த விதமாக விசுவாசியுங்கள். இப்பொழுது அந்த மான் எப்படியாக தனக்குள் தாயின் குணத்தை கொண்டிருந்ததோ, அவ்விதமாகவே உங்களை கிறிஸ்தவர்களாக மாற்றின அந்த தேவ ஆவியானவர் தாமே நீ அந்த நபருக்கு ஜெபிக்கிற வேளையில் இங்கு இருக்கிறதான அந்த உண்மையான கிறிஸ்துவின் ஆவி உனக்கு மகத்தானவரும் சிறந்தவராகவும் இருப்பாராக. உலகம் இவைகளை நம்பாது. உலகம் அதை வெறுக்கிறது. உலகம் அதை புரிந்து கொள்ளாது. அவர்களால் முடியாது என்று வேதம் கூறிற்று. உலகம் தனக்கு சொந்தமானவர்களை அறிந்திருக்கிறது. மற்றும் தேவனும் தனக்குசொந்தமானவர்களை அறிந்திருக் கிறார். தேவன் வாக்குறைத்திருக்கிறார். அது சத்தியம்.அது உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்மாறாதவர். இப்பொழுது ஜெபிக்கலாம். 73கர்த்தராகிய இயேசுவே, பெலவீனமாய் இருக்கிறவர்களுக்காகவும், வியாதியாய் இருக்கிறவர்களுக்காகவும் இங்கே சில கைக்குட்டைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் மேல் என்னுடைய கைகளை வைக்கிறேன். ஏனென்றால் பவுலின் சரீரத்திலிருந்து கைக்- குட்டைகளையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதியஸ்தர்கள் மேல் போட வியாதிகள் அவர்களை விட்டு நீங்கிப் போயின, பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன என்று நாங்கள் வேதத்திலே போதிக்கப்பட்டிருக்கிறோம். இப்பொழுது நாங்கள் பவுல் அல்ல. ஆனால் நீர் இன்னும் அதே இயேசுவாக இருக்கிறீர். இதோ இந்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போனவர்களுக்காக, இதை நீர் கனப்படுத்த வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு சிவந்த சமுத்திரமானது வழியில் இருந்த போது “தேவன் கோபமான கண்களுடன் அக்கினி ஸ்தம்பம் மூலம் கீழே பார்த்த போது, விசுவாசிகள்தங்களுடைய கடமையின் பாதையில், அதாவது தங்களுடைய வழியில் சமுத்திரமானது இருந்ததினாலே சமுத்திரம் பயந்து பின் சென்று விசுவாசிகள் வாக்குத்தத்த பூமிக்கு கடந்து செல்லும்படி செய்தது” என்று ஒரு எழுத்தாளன் சொன்னது போன்று இவர்கள் அந்த மக்கள் மேல் அதை வைக்கும்போது நடந்தேறுவதாக. தேவனாகிய கர்த்தாவே இன்றிரவு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக இந்த கைகுட்டையின் மேலாகவும் மற்றும் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்து மற்றவருக்காக ஜெபிக்கிற இக்கூட்டத்தாரையும் பார்ப்பீராக. இவ்விதமாக “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது” என்றீர். 74கர்த்தாவே, இன்றிரவு கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்தவர்கள் தங்கள் கைகளை யார் மேல் வைத்தார்களோ அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலாய் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை இறங்க ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் நிஜத்திற்கு வரும்படியாக ஆவியானவர் தாமே அவர்களை உயிர்ப்பிப்பீராக. கர்த்தாவே, அவர்கள் இதை தவறவிட வேண்டாம். பிதாவே, ஏதோ தவறவிட போவதைப் போன்று இவர்கள் இருக்க வேண்டாம். எல்லா தீர்க்கதரிசிகளைக் காட்டிலும், எல்லா பிரசங்கிகளைக் காட்டிலும், எல்லா போப்பு அல்லது பெரும் அதிகாரம் கொண்டவரைக் காட்டிலும், எதுவாக இருந்தாலும் இவை எல்லாவற்றைக் காட்டிலும் மகத்தான இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் பிரசன்னமானது இங்கு இருக்கிறது என்ற தரிசனத்தை பிரிமிங்காம் (Birmingham) பிடித்துக் கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தையில் வாக்கு பண்ணினபடியாக “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக” அதே இயேசு கிறிஸ்துவாக இந்த கடைசி காலத்தில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிற வேளையில் அவர்களுக்காக இந்த விசுவாசத்தின் ஜெபத்தினை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவைகளை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். 75இப்பொழுது ஒவ்வொருவரும் உங்களுடையகைகளை மற்றவர்கள் மேல் வைத்திருக்கிற வேளையில், உங்கள் கண்களை மூடி, வாக்குத்தத்தம் பண்ணின கிறிஸ்து இங்கு வந்து தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவு கூறுங்கள். ஆம், இதோ அங்கே சரியாக எனக்கு முன்பாக காச நோயினால் பீடிக்கப்பட்டு உட்கார்ந்திருக்கிற ஒருவர் குணமாவதை காண்கிறேன். அது இந்த கட்டிடத்திலுள்ள எல்லா இடத்திலும் செல்கிறது. மெய்யாகவே தேவனானால்... ஒரு மனிதன் எந்த காரியத்தை வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் அவை அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தேவன் இறங்கி வந்து ஒரு காரியத்தை கூறி நிரூபித்து, அதை சத்தியமென்று உறுதிப்படுத்தும் போது அதை அவிசுவாசிப்பது மன்னிக்கப்பட முடியாத குற்றமாயிருக்கிறது. “அது இந்த உலகத்திலும் வருகின்ற உலகத்திலும் மன்னிக்கப்படாது” என்று இயேசு சொன்னார். வார்த்தை இதை வாக்களித்திருக்க அது உங்களுக்கு முன்பாக இப்பொழுது நிரூபிக்கப்படுகிறது. இதோ அவர் இந்த இரவிலே நம்மத்தியில் இருக்கும் போது, நாம் அவரோடு இருக்கும் போது, மக்களே, அவரை இயேசுவின் நாமத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரை உண்மையாய் ஏற்றுக் கொண்டு சொந்த இரட்சகராய், சுகமளிக்கிறவராய் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் எழும்பி நின்று, “நான் சாட்சியாய் நிற்பேன், நான் உண்மையாய் விசுவாசித்து இப்பொழுது என்னுடைய சுகத்தையும் என்னுடைய இரட்சிப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய எல்லா தேவைகளையும் இயேசுவின் பிரசன்னத்திலே இப்பொழுது ஏற்றுக் கொள்கிறேன்” என்று அறிக்கையிடுவீர்களா? ஓ, இந்த கட்டிடத்தை சுற்றி பாருங்கள். கிட்டத்தட்ட முழுசபையும் எழும்பி நிற்கிறார்கள். இது அற்புதமாயிருக்கிறது. இது அழகாய் இருக்கிறது. இப்பொழுது உங்கள் விசுவாசத்தினால் எல்லாம் முடிவு பெறும். “உங்களால் விசுவாசிக்க கூடுமானால்”. 76இப்பொழுது நாம் கண்களை மூடி கைகளை உயர்த்தி, “நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் என்னை முந்தி நேசித்தார்”என்ற பாடலை பாடுவோம். நாமெல்லாரும் சேர்ந்து இதைப் பாடி அவருக்கு துதிகளை ஏறெடுப்போம், இந்த துதிகளைப் பாடி ஏறெடுப்போம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் என்னை முந்தி நேசித்து என்னுடைய இரட்சிப்பை கல்வாரி மரத்திலே வாங்கினார் நாம் நம்முடைய கரத்தை உயர்த்தி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுவோம் (சபையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்என்கின்றனர்) “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” ('கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“) “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” ('கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“) “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” ('கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“) நான் அவரை நேசிக்கிறேன், (எல்லோரும் சேர்ந்து) நான் அவரை நேசிக்கிறேன், ஏனென்றால் . . . . சகோதரன் உர்ஷன்,நீங்கள் அவர்களை (ஜெபித்து) அனுப்பிவிட வேண்டும் என நினைக்கிறேன். (யாரோ ஒருவர், “இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களைக் குறித்து என்ன, என்று கூறுகிறார்) நான் அவர்களை முன்பாக அழைப்பேன் என்னுடைய இரட்சிப்பை கல்வாரி மரத்திலே . . . . இப்பொழுது தலையை ஒரு விசை தாழ்த்துங்கள். பியானோ கருவியை வாசிக்கிறவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். 77உங்களுடைய தீர்மானத்தை இன்னும் விசுவாசிக்கிறீர்களா என்று ஆலோசிக்கிறேன். தேவன் இருதயத்தின் இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிப்பீர்களா என்று ஆலோசிக்கிறேன். அவர் அப்படி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனாலும் அவர் செய்வேன் என்று சொன்னார். இயேசு முதல் முறையாக வந்தபோது, அவர் சுகமளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர் செய்வார் என்று கூறியிருந்தார். “தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்படியாய் அதைச் செய்தார்”. அந்தப்படியாக இந்த இரவும் தீர்க்கதரிசிகள் உரைத்ததின் நிமித்தமாகவும் இயேசு தாம் உரைத்ததின் மூலமாகவும் அவர் இன்றிரவு செய்கிறார். அந்த தாய் மான் தன் குட்டிக்காக கொண்டிருந்த அன்பைப் போல தேவனுடைய அன்பை தன் இருதயத்திலே கிறிஸ்துவுக்காக கொண்டிருக்க விரும்புவோர், மற்றும் நம்முடைய ஜெபத்திற்கு செவிகொடுப்பார் என்று விசுவாசிப்போர் இந்த பக்கமாக வந்து நிற்பீர்களா‚ நாங்கள் உங்களுக்கு ஜெபிக்கட்டும். நாங்கள் மறுபடியும் பாடும் போது இங்கே வாருங்கள். நீங்கள் அப்பொழுது எல்லார் முன்பாகவும் அறிக்கையிடுகிறீர்கள். நீங்கள் வந்து இப்பக்கமாக நில்லுங்கள். என்னுடைய ஜெபம் உங்களுக்கு உதவும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் நாங்கள் இப்பாடலை மறுபடியும் பாடும்போது இங்கே கடந்து வாருங்கள். நீங்கள் இங்கே வருகிறதின் நிமித்தமாக அவரை நேசிக்கிறீர்கள் என்று நிரூபியுங்கள். 'கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக“. .. . ஏனென்றால் அவர் என்னை முந்தி நேசித்தார். மேல் மாடத்தில் (aisles) இருக்கிறவர்களே இங்கே இறங்கி வாருங்கள். நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம். அது சரியே. நீங்கள் உண்மையிலேயே உத்தமமாயிருக்கிறீர்கள் என்றால் இறங்கி வாருங்கள். .. . கல்வாரியின் மரத்திலே. 'நான் . . .“மேல் மாடத்தை விட்டு மக்கள் இறங்கி வருகிறார்கள். எல்லோரும் தொடர்ந்து பாடுங்கள். 'நான்..” இருக்கையின் நடுவில் இருக்கும் வழியாய் வாருங்கள், எங்கிருந்தாலும் சரி,உடனே வாருங்கள். .. . ஏனென்றால் அவர் என்னை முந்தி நேசித்தார்... நினைவில் கொள்ளுங்கள் நியாயத்தீர்ப்பிலே உங்களை சந்திக்கும் தேவன் இப்பொழுது இந்த இரவிலே இந்த சபையிலே சந்தித்தார். .. . என்னுடைய இரட்சிப்பு கல்வாரியின் . . . 78இழக்கப்பட்ட ஆத்துமாக்களின் மேல் அக்கரையுள்ளவர் களும், இன்னும் மக்களின் தேவையைக் குறித்ததரிசனம் கொண்டவர்களும், பாவிகளை இன்னும் தேவனால் இரட்சிக்க முடியும் என்று விசுவாசிக்கிறவர்களுமாகிய இங்கிருக்கும் அனைத்து ஊழியர்காரர்களும் மக்களோடு கடந்து வருவீர்களா? நீங்கள் பார்த்ததிலேயே மகத்தான காரியம் நிறைவேறுவதை இப்பொழுது காணக் கூடும். இதைத்தான் பரிசுத்த ஆவியானவர் விரும்புகிறார். நான் அவரை நேசிக்கிறேன். . . இப்பொழுது நிரூபியுங்கள். நீங்கள்அவரை நேசிக்கிறீர்கள் என்றும் அவர் மேல் பற்றுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்றும் நிரூபியுங்கள். நீங்கள் அவரை நேசித்தால் அவருடைய பிள்ளைகளையும் நேசிக்கிறீர்கள். .. . நேசிக்கிறேன் ஏனென்றால்... இப்பொழுது இங்கிருக்கும் இந்த மக்களோடு இணைந்து கொள்ளுங்கள். . . . நேசிக்கிறேன். . . இங்கு மேலே வந்து மக்களோடு இணைந்து கொள்ளுங்கள், இந்த மாதிரியாக, அவர்களுடன் தொடர்ந்து வந்து அவர்கள் மேல் உங்கள் கைகளை வையுங்கள். இங்கு கடந்து வாருங்கள். நாங்கள் ஜெபிக்கப் போகிறோம். இன்றிரவு இந்த ஜனங்களின் மத்தியில் பரிசுத்த ஆவி ஊற்றப்படும் என்று விசுவாசிக்கிறேன். .. . கல்வாரியின் மரத்திலே ஓ, இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் அவரில் அன்பு கூருங்கள், அவருடைய வார்த்தையை நீங்கள் வாசிக்கலாம். நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஓ, நான் . . . இப்பொழுது இந்த உலகத்தை விட்டு விலகிவிடுங்கள். உலகத்திற்குரிய எல்லாவற்றையும்விட்டு விலகிவிடுங்கள். பாருங்கள்? ஏனென்றால் அவர் என்னை முதலாவதாக நேசித்தார் ஓ, எப்படி. . . (அருமை) ஓ, எப்படி . . . இப்பொழுது ஊழியக்காரர்கள் உங்களிடையே.. . என்னோடிரும். ஊழியக்காரர்கள் உள்ளே வாருங்கள்ƒ வந்து ஜனங்களைச் சுற்றி வாருங்கள். ஓ, இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் முந்தி என்னை நேசித்தார். அவர் இப்பொழுது இங்கு நிற்கிறார். அவருக்கு உங்கள் இருதயத்தில் உள்ள எல்லா காரியமும் தெரியும். அவருக்கு தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இங்கே, எந்த ஒரு ரகசியம் இல்லை. நீங்கள் சொல்கிறது சரியாக இன்னது என்று அவருக்குத் தெரியும். 79இங்கு இப்பொழுது இருக்கிற எல்லோரும், இங்கு வர முடியாதவர்களும் கூட, நம்முடைய தலையை தாழ்த்துவோம். நாம் ஜெபிக்கலாம். ஒவ்வொருவரும் உங்கள் தவறுகளையும் உங்கள் அவிசுவாசங்களையும் அறிக்கையிடுங்கள். இப்படியாக சொல்லுங்கள் “கர்த்தராகிய இயேசுவே, ஒரு சமயத்திலே நான் ஒரு சபையை சேர்ந்திருந்தேன். சபைக்கு சென்றிருந்த போதிலும் நான் ஒரு போதும் திருப்தியடைவில்லை. நான் உரக்கசத்தமாய் கத்தியிருக்கலாம், அன்னிய பாஷையிலும் பேசியிருக்கலாம், ஒரு சபையிலும் சேர்ந்திருக்கலாம்”.ஆனால் வேறு ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. அவையெல்லாம் நல்லதே. அதற்கு எதிரானவன் அல்ல நான். ஆனால் அதை குறித்து அல்ல நான் பேசுவது. நான் மிக ஆழமான தேவனுடைய அன்பைக் குறித்து பேசுகிறேன். அதுதான் பரிசுத்த ஆவி. தேவனுடைய வார்த்தை உங்கள் மூலமாக ஜீவிக்கவும், உங்கள் மூலம் கிரியை செய்யவும் ஏற்ற உண்மையான அனுபவத்தை பெறவே விரும்புகிறீர்கள். அந்த வழியில் கசப்புக்கான எந்த வேரும் இராது. பரிசுத்த ஆவியானவரே உங்களுக்குள்ளாக பிரவாகித்து வருவார். அது தான் உங்களுக்குத் தேவை. இப்பொழுது தலைகளை தாழ்த்தி பயபக்தியோடு ஜெபியுங்கள். ஊழியக்காரர்களாகிய நீங்கள் அவர்கள் மேலே கையை வையுங்கள். 80எங்கள் பரலோகப் பிதாவே, இந்த இரவின் பொழுதிலே, தாங்கள் தவறாயிருக்கிறார்கள் என்று அறிந்து அறிக்கையிடுகிற இக்கூட்டத்தாரை உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். ஒருவேளை அவர்களுடைய எண்ணங்களும் நோக்கமும் கூட தவறாயிருந்திருக்கக் கூடும். ஆனால் இந்த இரவின் பொழுதிலே நீர் எல்லா பாவத்தையும் மன்னிப்பீர் என்ற விசுவாசத்திலே வந்திருக்கிறார்கள். அநேகர் பல வருடங்களாக சபைக்கு சென்றவர்கள். அனேகர் மகத்தான தொண்டு காரியங்களை செய்தவர்கள். ஆனால் இன்றிரவு தங்கள் ஜீவியத்தில் குறைவுபடுகிற அந்த நிஜத்தன்மையை கோருகிறார்கள். அந்த இனிமையை கோருகிறார்கள். அங்கே வார்த்தையின் வடிவத்தில் அசைவாடின பரிசுத்த ஆவியை கோருகிறார்கள். மேலும் உம்முடைய ஊழியக்காரர்கள் அவர்கள் மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் இந்த ஜெபத்தைஅவர்களுக்காக ஜெபித்து, இவர்கள் வேறு எந்த நிதானத்திலும் அல்ல, ஆனால் இப்பொழுதே உம்முடைய பிரசன்னத்திலே அவர்களுடைய இருதயம் என்றென்றுமாய் நிலைவரப்படட்டும். ஆண்டவரே அவர்கள் வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியானவர் வந்து அதை மகத்தான பரலோகத்தின் தேனினாலே இனிமையாக்கட்டும். மற்றும் அவர்களுக்கு ஒரு அனுபவத்தை தாரும். அது அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கிற அனுபவமாக இருக்கட்டும், மகத்தான ஜீவிக்கிற தேவன் தாமே அவர்கள் ஜீவியத்தில் வல்லமையாய் இறங்கி அவர்கள் தேவையை இப்பொழுதே பூர்த்தி செய்வீராக. நித்திய தேவனே இதை அருளும். அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் பலிகளை ஏறெடுக்கிறதான வேளையிலே அவர்களை உமக்கே அன்பின் பரிசாக அளிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர்தாமே அதை அவர்களுக்கு தத்ரூபமாக மாற்றுவீராக. தேவனே இதை அருளிச் செய்யும், இயேசுவின் நாமத்திலே. உங்கள் மேய்ப்பர் ஜெபிக்கப் போகிறார்.(அந்த சகோதரன் ஜெபிக்கிறார்) ஆம் ஆண்டவரே. ஆம் ஆண்டவரே. அதை அருளும்.